பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - சடகோபன் செந்தமிழ் ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பென் பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் எற்றுக்கு? என்ற வினா எழுகின்றது. இதற்கு விடை காணவேண்டும். ஆழ்வார்கள் பெண் தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகின்றன ரல்லர். இந்த நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வந்து சேருகின்றது. புருடோத்தமனாகிய எம்பெருமானின் பேராண்மைக்கு முன் உலகம் அடங்கப் பெண் தன்மையதா யிருக்கையாலும், சீவான்மாவுக்கு சுவாதந்திரிய நாற்றமே பின்றிப் பாரதத்திரியமே வடிவாயிருப்பதாலும் வ் இக களுக்கேற்ப பெண் பாவனை வந்தேறின்ற்ே ன்டி கொள்ளலாம். எனவே, ஆழ்வார்கள் குறிப்பாக நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பெண்தன்மை எய்திப் பல திருக்கோயில் எம்பெருமான்களைப் பாடி அநுபவித்ததை அவர்களுடைய திருப்பாசுரங்களில் கண்டு மகிழலாம். - வைணவர்களிடையே நிலவும் இன்னொரு மரபும் உண்டு. தண்டகாரணிய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயமங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்றுண்டு. ஆனால், ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெரு மானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடத்தில் சில சமயம் ஞானம் தலைதுாக்கி நிற்கும். சில சமயம் பிரேமம் (காதல்) மீதுர்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலையிலிருக்கும் பொழுதும் அவர்கள் பாசுரம் அருளியுள்ளனர். இதனை, ஞானத்தில் தம்பேச்சு - - பிரேமத்தில் பெண்பேச்சு (118) என்று ஆசாரிய ஹிருதயம்' என்ற நூல் குறிப்பிடும். அதாவது, ஞான நிலையில் இருக்கும்போது அவர்கள்