பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 187 பதிகங்கள்; தாய் பாவனையில் பேசியவை ஏழு பதிகங்கள்: மகள் பாவனையில் பேசியவை பதினேழு பதிகங்கள். இந்த மூன்று நிலைகளும் ஞானாவஸ்தைகள்' என்னாமல் 'பிரஜ்ஞாவஸ்தைகள்' என்றது மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக, திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள் களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது? பெரிய திருமொழியில் உள்ள அகப்பொருள் நுவலும் திருமொழிகள் 23; திருநெடுந்தாண்டகத்தில் 2: மடல் 2: ஆகமொத்தம் 27, திருமொழிகள், இவற்றுள்ளும் தாய்ப் பாவனையில் உள்ளவை 10; மகள் பாவனையில் உள்ளவை 17; தோழிப் பாவனையில் ஒன்றுகூட இல்லை. இங்ங்னம் மூன்று வகையாகச் செல்லும் பாசுரங்கட்குத் திருமந்திரத்தின் அடிப்படையில் விளக்கமும் தந்துள்ளனர். நம் முன்னோர்கள். “ஓம் நமோ காராயணாய' என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன." அவை: சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன." அதாவது பிரணவம் சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாயிருத்தலையும்) நமஸ்ஸு பாரதந்திரியத் தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டிருத் தலையும்), 'நாராயணாய’ சேதநன் ஈசுவரனுக்குப் புரியவேண்டிய கைங்கரியத்தையும் தெரிவிக்கின்றன. மற்றும் ஒம் என்னும் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் அ.உ.ம என்ற மூன்று எழுத்துக் கொண்டது. இந்த மூன்று எழுத்துகளும் மூன்று பதங்களாய் மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். அதாவது அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிம்ைத் 5. முமுட்சு- 29 视 6. டிெ -30