பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX அருமையாக விளக்கி இப்பாடல்கள் தம் ஒவித்தொகுதி யினால், இசையின் தன்மையினால், பொருளைத் தவிர்த்தும் கூட பயன்தர வல்லவை என வைணவ உலகு கருதி வந்து பயன்படுத்தும் முறையை நுட்பமாகக் காட்டுகின்றார். ஆக, சடகோபரின் செந்தமிழ் என்பது திருந்திய வேதமே. குறையறிவுடையோரால் கலக்கப் பெற்ற சுருதி", நல்ஞானத் துறை சேர்ந்து, தெளிவுற்று ஆழ்பொருளைக் காட்டுகின்றது என ஆசாரிய ஹிருதயம் என்ற நூல் எடுத்துக் காட்டுவதும், சடகோபரந்தாதி குருகூர்ப் பண்ணவன் விளைத்த தமிழ் வேதத்தின் திருந்திய செந்தமிழ் எனப் போற்றுவதும் எவ்வளவு பொருத்தம் என்பதன் விளக்க மாகின்றது நம் பேராசிரியர் அவர்களது நூல். பேராசிரியரின் இந்நூலில் முதல் ஐந்து இயல்கள் முன்னர் விளக்கிய பிரமேயத்தைப் பற்றியவை. அதாவது அங்குச் சொல்லப்படும் பொருள், திவ்விய தேசப் பெருமை, தம்மாழ்வார் பாடல் பெற்று மங்களாசாசனம் பெறும் திருப்பதிகளே முதலிலே விளக்கம் பெறுகின்றன. திருவரங் கம் தொடங்கி - சோழ, பாண்டிய, மலைநாடு, வடநாடு - உள்ளிட்ட ஆழ்வார் மங்களாசாசனம் பெற்ற முப்பத்தாறு திவ்விய தேசங்களைப் பற்றியவை. சில எடுத்துக்காட்டு களையே தந்து, ஆழ்வார் அந்தந்தத் திருப்பதி எம்பெரு மானிடம் கொள்ளும் உறவினையும், ஈடுபாட்டினையும், அவர் பாசுரம்வழி ந ைஅநுபவமாக மாற்றும் அற்புதம் எப்படி நிகழ்கின்றது என்று பேராசிரியர் அவர்கள் விளக்கு கிறார்கள். அவர்களது விளக்கத்திற்குத் துணை நிற்பன பெரிய வாச்சான் பிள்ளை, நம் பிள்ளை ஆகியோரின் வியாக்கியானங் களும் ஆசாரிய ஹிருதயம்’, ‘பூரீவசனபூஷணம்’ ‘முமுட்கப் படி போன்ற இரகசிய கிரந்தங்களென வழங்கப்படும்