பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 சடகோபன் செந்தமிழ் அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று சமயச் சான்றோர்கள் கொள்வர். காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச்செய்தல் கூடும். அங்ஙனமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசுரங் கள் அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல்நலத்திற்குக் காரணமான வேப்பிலை உருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியிற்பூசிக் கொடுத்து உண்பிப்பது போலவும், கொயினாமாத்திரைகட்குச் சருக்கரைப் பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின் பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர், இது கடையாய காமத் தினை புடையவர்கட்குக் காட்டப் பெறும் உக்தி முறையாக இறையனார் களவியலிலும்"கூறப்பெற்றுள்ளமையை சண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஓர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை என்க. இனி, இந்த மூன்று நிலைகளில் உள்ள நம்மாழ்வாரின் பாசுரங்களை அடுத்துவரும் இயல்களில் காண்போம்.