பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் #95 இவர்கட்கு நிதியாம்; மகரிஷிகளின் கோஷ்டியில் கலக்கம் காணக்கிடைக்காது; ஆழ்வார்களின் கோஷ்டியில் தெளிவு காணக் கிடைக்காது.” என்பர் நம் முதலிகள் மாயப்போர்; ஆச்சரியமான போர்; அன்றிக்கே வஞ்சனை யுடைய போர் என்னுதல், பகலை இரவாக்குவது, ஆயுதம் எடேன்’ என்று உறுதி கூறி ஆயுதம், எடுப்பது ஆனவை பாண்டவர் பக்கலிலும் உண்டு, மகாரதர் பலர் கூடி தனியனாக நின்ற அபிமன்யுவைக் கொன்றது தொடக்கமா னவை கெளரவர்கள் பக்கலிலும் உண்டு. இவற்றைச் சொன்னபடி, இத்தலைவிக்கு உண்டான நோய் இன்ன வகைத்து என்பதைப் பின்னிரண்டடிகள் மெய்ப்பிப்பவை. கண்ண பிரானுடைய ஆச்ரித பட்சபாதம், ஆச்ரிதசெளலப்பியம் முதலிய திருக்குணங்களில் ஈடுப்பட்டதனால் ஏற்பட்ட நோய் காண்மின் என்று தெரிவிக்கின்றாள் தோழி. திசைக்கின்ற தேஇவள் நோய்; இது மிக்க பெருங் தெய்வம்: இசைப்பு:இன்றி கீர்அணங் கண்டும் இளங்தெய்வம் அன்றிது: திசைப்பின்றி யேசங்கு சக்கரம் என்றிவள் கேட்க, நீர் இசைக்கிற்றி ராகில்கன் றேஇல் பெறும், இது காண்மினே (2) திசைக்கின்றது . அறிவு கெடுவது; மிக்க பெருந் தெய்வம் - பராத்பரமான தெய்வம் அடியாக வந்தது; திசைப்பு - மனக் குழப்பம்; அணங் காடுதல் - தெய்வம் ஆவேசித்து ஆடுதல்; கேட்க காதில் விழும்படி; இசைக்கிற்றீர் ஆகில் - சொல்ல வல்வீராகில்; இல்பெறும் - இல்விருப்புப்பெறுவாள்; இது காண்மின் செய்து பாருங்கள்)