பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சடகோபன் செந்தமிழ் இதில் 'சிறு தெய்வங்கட்குச் செய்யும் - சாந்திகளால் இவளுடைய நோய் போக்கவரிது: இவள் காதில் சங்கு சக்கரம் என்று ஒதினால் இவளுடைய நோய் நீங்கும்” என் கின்றாள் தோழி. இவ்விடத்தில் ஒர் ஐதிகம் : பட்டர் காலத்தில் ஆய்ச்சி மகன் என்ற பாகவதரொருவர் நோவுகண்டு உணர்வற்றுக் கிடக்கும் காலத்தில் பட்டர் அவரைப் பார்க்க எழுந் தருளினாராம். அப்போது அந்த ஆய்ச்சி மகன் அடியோடு அறிவு நடையாடாதபடி இருப்பதைக் கண்ட பட்டர், அவர் அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர் என்பதை அறிந்தவுராதலாலே அவருடைய திருச்செவியில் மெல்ல ஊதினாப்போலே அழகிய மணவாளப் பெருமாளே சரணம்’ என்றாராம்; அதனால் அந்த ஆய்ச்சி மகன் உணர்ச்சி உண்டாகி நெடும்போதெல்லாம் அந்த வார்த்தையையே சொல்லிக் கொண்டிருந்து திருநாட்டுக்கு நடந்தாராம். இவ்விடத்தில் ஆழ்வாரின் திருவிருத்தத்தில் ஒரு பாசுரம் அதுசந்திக்கத் தக்கது. - சில்மொழி கோயோ கழிபெருக் தெய்வம்.இக் கோய்இனதென்(று) இல்மொழி கேட்கும் இளக்தெய்வம் அன்றிது வேல!கில்கீ; என்மொழி கேண்மின், என்அன்ன்ைனமீர்! உலகேழும் உண்டான் சொன்மொழி மாலைஅக் தண்ணங் துழாய்கொண்டு சூட்டுமினே(20) (சில்மொழி - சில பேச்சுகளே பேசவல்லவள்; பெரு - மிகப் பெரிய இனது. இப்படிப்பட்டது; சொல் மொழி - திருநாமத்தைச் சொல்லுதல்)