பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 197 கட்டுவிச்சியின் சொற்கேட்டு வெறியாட்டாளன்ை அழைப்பித்து முருக பூசை செய்யத் துணிகின்றாள் செவிவித் தாய். இதனைக் கண்ட தலைமகள் மிகவும் வருந்துவதைக் காண்கின்றாள் தோழி. உடனே அவள் வேலனையும் தாயரையும் நோக்கிக் கண்டித்துச் சில கூறி வெறி விலக்கு வதாகச் செல்கின்றது இப்பாசுரம். நாடக அரங்கில் எதிர் பாராத பாத்திரம் ஒன்று திடீர் பிரவேசம் நடைபெறுவது போல் தோழி வெறியாடு களத்தில் திடீர் பிரவேசம் செய் கின்றாள். வேலனையும் தாய்மாரையும் நோக்கித் தோழிகறுவது: 'இந்த நங்கைக்கு இப்பொழுது நேர்ந்துள்ள நோயானது நீங்கள் நினைக்கின்றபடி சிறு தெய்வம் அடியாக வந்ததன்று; மிகப்பெருந் தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது. வேலன் பக்கம் திரும்பி: "வேல! நில்நீ என்று அவன் வெறியாட்டைத் தடுத்து நிறுத்தி, பின்னர் அன்னைமாரைப் பார்த்து, நீங்கள் இங்ங்ணம் கலங்குவது உசிதமன்று; உங்களை விட நான் மிகச் சிறியளே யாயினும், இப்போது என் பேச்சைக் கேளுங்கள். இந்த விபரீதமான முயற்சிகளைக் கைவிட்டு உலகம் உண்ட பெருவாயனுடைய திருநாமங்களை இவளது செவியில் படுமாறு ஒதுங்கள்; அவன் மாலையில் திகழும் திருத்துழாய் பிரசாதத்தைக் கொணர்ந்து கொடுங்கள்? இதுவே இவ ளுடைய நோய்க்கு ஏற்ற மருந்தாகும். நோய் நாடி நோயின் குணம் நாடி அது தணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செய்வது அல்லவா முறை?" என்கின்றாள் தோழி. மறந்தும் புறந்தொழா மாந்தர் வழி வந்தவளாதலால், 'இளந் தெய்வ ஏற்பாட்டை நீக்கி, கழிபெருந் தெய்வத்தை' வழிபடுமாறு கூறுவது எண்ணி மகிழத்தக்கது.