பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200. சடகோபன் செந்தமிழ். மற்றொரு தெய்வத்தைத் தொழாத பாங்கை அறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடத்து கொள்வதே யுக்த மாகும். 'பிறைதொழும் பருவத்திலும் பிறைதொழு தறியாள்" என்பர் நம்பிள்ளை அறியாக் காலத்துள்ளே, அடிமைக்கண் அன்பு செய்வித்து (திருவாய் 2.3:3). என்னும்படியிருக்கின்ற இவளுக்குச் சிறுதெய்வ வழிபாடு சிறிதும் பொருத்தமில்லை. வேதாந்த விழுப்பொருளான வண்துவராபதி மன்னனுடைய திருநாமத்தைச் சொல்வி ஏத்துதல் செய்யவே இவள் நோய் நீங்கும் (10).இவ்விடத்தில்: முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய; கலையோ அரையில்லை; காவோ குழலும்; கடல்மண்னெல்லாம் விலையோ எனமிளிருங்கண், இவள்பர மே!பெருமான் மலையோ திருவேங் கடமென்று கற்கின்ற வாசகமே (60) (போந்தில - தோன்றவில்லை; மொய் அடர்ந்த; பூகுழல் - மென்மையான தலைமயிர்; குறிய . குட்டையாயுள்ளன; கலை - ஆடை; அரை " இடுப்பு: நா.நாக்கு: குழலுக்-குதலைச் சொல்லாடு கிறது; கற்கின்ற வாசகம் - பயில்கின்ற வார்த்தை) என்ற திருவிருத்தப் பாசுரம் அதுசந்திக்கத் தக்கது. . . . . இந்தப் பதிகம் முழுவதும் தலைவி எம்பெருமான்மீது ஈடுபட்டிருக்கும் நிலையைக் (அநந்யார்ஹத்துவம்) காண يه 2. தலைவியின் பெருமை இதைத் தோழி வாயில் வெளிப்படச் செய்கின்றார் ஆழ்வார். தம் பெருமையைத் தாமே வெளியிட்டுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு