பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi தத்துவ நூல்களும், நேற்று வரை நம்மிடையே வாழ்ந்து பெரும் சமயப் பணியாற்றிய பிரதிவாதி பயங்கரம் அண்ணங் கராச்சாரியார் சுவாமிகளது திவ்வியார்த்த தீபிகை உரையும் ஆகும். இவை தவிர, பேராசிரியர் தமக்கே உரிய ஆழ்ந்த தமிழ்ப் புலமையையும், காட்டி - தொல்காப்பியம், திருக்குறள், ஒரு சில இடங்களில் கம்பராமாயணம் - ஆகிய வற்றிலிருந்தும் ஆதாரங்கள் தத்து, சடகோபன் செந்தமிழ் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறார்கள். - பேராசிரியர் இப்பாசுரங்களை வியாக்கியானங்கள் உதவியினால் விளக்கும்போது, அவர்கள் உள்ளம் தோய் கின்ற படியை, விரிவஞ்சி, இரு எடுத்துக் காட்டுகளால் சுட்டுவேன். பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் திருப்புளிங்குடி எம் பெருமானிடம் ஆழ்வாரின் அநுபவத்தை விளக்கும்போது (aš 59, 70, 71) ‘உன்தாமரைக் கண்களால் நோக்காய்' என்ற சொற்களில் பொருள் தரும் இடம் சிறப்பானது. அங்கேயுள்ள அடிக்குறிப்பும் (குறிப்பு-20) பேராசிரியர் எவ்வளவு அநுபவிக்கின்றார் என்பதைக் காட்டும். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் இந்த வியாக்கியானங்களிலும், பாசுரங் களிலும் ஈடுபட்டு, தாம் விளக்க முற்படும்போது, வைணவத் திற்கே உரிய கலைச் சொல்லைப் பயன் கொள்கின்றார்கள். எப்படி? இப்போது நாம் இந்தப் பாசுரங்களின் பொருளில் ஆழங்கால் படுவோம்’ என்று கூறித்தான்! அருளிச் செயல்கள் அகப்பொருள் தத்துவம்', தோழி தாய்', "மகள் பாசுரங்கள் என்ற தலைப்புகளில் 6 முதல் 10-வது முடிய ஐந்து இயல்களில் வைணவ நெறியின் 'பிரமாணம்’ என்ற அம்சத்தின் விளக்கமாகத் தருகின்றார்கள். அருளிச் செயல்கள்’ என்று தலைப்பிட்ட இயலில் நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களின் சாராம்சத்தைத்