பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது சுவையுடைத் தாவதற்காக அதை வேறொருவர். தலையில் ஏற்றப்பார்த்துத் தோழியின் பாசுரமாக வைத்து. இத்திருவாய் மொழியை (6.5) அமைத்தருன்கின்றிார். ஆழ்வார். துவளில் மாடத்து (6.5) என்ற திருவாய் மொழியின் அவதாரிகையில் ஈட்டாசிரியர், இத்திருவார் மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமான்னக் கவிபாடினார்; இத்திருவாய்மொழியில் தம் படி சொல்லு' கின்றார். சிங்கநோக்காலே பொய்ந் நின்ற ( திருவிருத். 爭 என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும் வர தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாய தேசத்தாலே பேசுகின்றார். இத்திருவாய்மொழி ஆழ்வார். தம்மைச் சொல்லுகிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பியிருப்பர்கள். பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞான நிலையை உடையவராய் வேத வாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின் என்கிற விஷயத்தை மறுபாடு உருவப் பேசின. தாமே வேணுமாகாதே தம்படி பேசியபோதும்' - என்று பேசுவர் நம்பிள்ளை. அவதாரிகையில் மேலும் நம்பிள்ளை கூறுவது: புரீஜனகராஜன் திருமகள் பிறந்தபோது சோதிடர்களை அழைத்து, 'இவளுடைய அத்ருஷ்ட பாகங்கள் எப்படி யிருக்கிறது? சொல்லுங்கள்’ என்று கேட்கையில், சோதி டர்கள் (அவள் பிறந்தநாள் குறிப்பைப்) பார்த்து. இவ்ஸ் பெற வேண்டிய பேறு நன்றாக உள்ளது; ஒரு குறையும் இல்லை; எல்லா உலகங்களையும் உடைய ஒருவனைக் கை பிடிக்கவும் கடவள்; ஆனால் வனவாசம் அநுபவிக்கவுமே சடவள்" என்றார்கள்; அப்படியே இப்பெண் பிள்ளை பிறந்தபோதும் இவள் திருத்தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து பேறு பற்றிய சிறப்புகளை உசாவுகையில், எல்லாம் நன்றாகவே உள்ளது; இவள் உயர்வற உயர்நலமுடையவனான அயர்வறும் அமரர்கள்