பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 203 மானது கோல மேனியையும் திவ்விய பூஷணங்களையும் திவ்வியாயுதங்களையும் நீர்வள நிலவளங்களையும் கண்டு மெய்மறந்து அவற்றையே வாய் வெருவத் தொடங்கினாள்: மீண்டும் தாய்மாருடன் உறவு செய்து கொள்ளும்படியான நிலைமையும் இல்லையாயிற்று, இந்நிலைமைகண்ட தாய் மார்கள், தோழியிடம் வந்து, ஐயோ! இச்சிறுமியின் நிலைமை இப்படியாய் விட்டதே! இவளை மீட்கும் வழி ஏதேனும் பார்த்துச் சொல்லலாகாதோ?’ என்ன, அத்ற்குத் தோழியானவள், அந்தோ, தண்ணிர் வழிந்தோடிச் சென்ற பின்பும் அணைகட்ட முயல்வாருண்டோ? ஏற். கெனவே இவளைத் தொலைவிலி மங்கலம் கொண்டு போகாமல் இருந்திருக்க வேண்டும். இவளது இயல்பு உங்கட்குத் தெரிந்திருந்தும் நீங்களே படிகடந்து சென்று இவளுக்குப் பிராவண்யாதிசயத்தை விளைத்திட்டு இப்பேர்து மீட்க வழி தேடுவதால் பயன் இல்லை. இனி இவள் பக்கல் கொண்டுள்ள நசையறுத்து இவள்வழியே செல்லப் பாருங் கள்' என்கின்றாள். தலைமகளின் நிலைமையை எடுத் துரைத்து “நீங்கள் கண்படைத்த பயனைப் பெறுமாறு பார்த்துக் கொண்டிருக்க வன்றோ தகுவது?’ என்று சொல்லிக் காட்டுகின்றாள். - தவளவொண்சங்கு சக்கரமென்றும் : "இவள் சங்கு சக்கரங்களின் அழகைப்பற்றிப் பேசுகின்றபடியைப் பாருங் கள். சாமளமான திருமேனிக்குப் பரபாகமாக வெளிய சங் கொன்று விளங்குகின்ற அழகு என்னே!' என்கின்றாள். இது சங்கின் இயற்கை நிறத்தைச் சொன்னதாகக் கொள்ளாமல் வேறுவகையாகவும் கொள்ளலாம். - உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளில் - கடல்வண்ணன் கைத்தலத்தே -(நாச்-திரு 1:8)