பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சடகோபன் செந்தமிழ் என்று ஆண்டாள் சொல்லுகிறபடியே, ‘சங்கே, நீ இடையி டின்றி பகவதநுபவம் பெற்றிருந்தும் அநுபவம் சிறிதும் இல்லாதவள்போலே உடம்பு வெளுக்கப் பெற்றாயே! உன் நிலையே இதுவானால் உன்னுடைய அநுபவத்தில் ஒரளவு கூட இல்லாத என் நிலை எப்படியாக வேண்டும்? என்கின் நாள்” என்றும் கொள்ளலாம். தாமரைத்தடங்கண் என்றும்: இதில், "பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண் டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத் தார் (திரு. விருத். 45) என்று தாமே கூறியபடியே என்னை இவ்வளவிலே கொண்டு நிறுத்தியது இத்திருக்கண் அல்லவா?’ என்று கண்ணைப் பற்றிப் பேசாநின்றாள். குவனை ஒண் மலர்க்கண்கன் : இதில், கரிய வாகிப் புடைபரக்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட,அப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே (அமனாதி-8) என்று பாண் பெருமாள் சொல்லியவாறு அத்திருக்கண் களின் நீர்மையை நினைந்தவாறே இவளுடைய கண்கள் நீர் மல்க நிற்பதற்கு மேற்படவுண்டோ? உலகர்கள் சாதாரணப் பொருள்களின் லாபா லாபங்களில் கண்ணிர் பெருகவிட்டுக் கிடக்க, இவள் பகவத்விஷயத்தில் கைவைத்து உள்ளஞ் சோர வுகந்தெதிர்விம்மி உரோம கூடங்களாய்க் கண்ணநீர் கள் துள்ளஞ்சோரத் துயிலணை கொள்ளேன்' ( ) என்று கூறும்படியான நிலைம்ை பெற்றிருக்க, இவ்வழகிய நிலையைக் கண்ணாரக் கண்டு கொண்டு களிக்க வேண்டாவோ?’ என்பது உள்ளுறையும் கருத்தாகும்.