பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சடகோபன் செந்தமிழ் திருப்பதிதன்னில் ஈடுபட்டு உங்களோடு உறவு அறும்படி யானாள். நம்பிள்ளை கூறுவார்: "ஆற்றங்கரையில் சோலை கள் எப்படிப் பேர்க்கவும் பேராதபடி பொருந்தி இருக் கின்றதோ, அப்படியே இப்பெண்பிள்ளையும் இத்தலத்தில் பொருந்திவிட்டாள். அச்சோலைகளைக் குறித்து இதவசனம் எப்படிப் பயன்படாதோ அப்படியே இவளைக் குறித்தும் இத வசனம் பயன்படாது. செவிடன் காதில் ஊதின சங்கொலி யின் நிலைதான். ஆர்த்தர்களின் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தபடியையும், மாணியுருவாய் மாவலியிடத்துச் சென்று மூன்றடி மண் இரந்து அங்கு நின்று ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் அளந்து கொண்டபடியையும், பராத்பரனாயிருப்பவன் இடைய னாய்ப் பிறந்து பசுக்களையும் மேய்த்துத் திரிந்த எளிவந்த தன்மையையும் வாய்வெருவிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணிர் பெருக நிற்கின்றாள். இங்கன் அவ்விடத்தில் மூழ்கிக் கிடக்கும் இவளை மீட்கப் பார்க்க வழியுண்டோ?'(3) 'இத்திருத்தலத்திற்குச் சென்ற இவள் அந்தணர்கள் நான்மறையோதும் அழகைக் கண்டு இந்த மறைகளை ஆதியில் எம்பெருமான் நான்முகனுக்கு உபதேசித்தவன் அன்றோ?' என்று கொண்டு அவன்மீது காதல் மிகப் பெற்றாள்; அவனது கட்டளையாகின்ற நான்மறைகளை யும் ஒதுகின்ற பாகவதர்களன்றோ இவர்கள்?’ என்று ஆரீவைணவர்களிடத்திலும் பக்திப் பெருங்காதல் மிகப் பெற்றாள்; இப்படிப் பகவத் பாகவத் பக்தியே வடிவெடுத்த வளான இவளைச் சம்சாரிகளான நீங்கள் இனி உறவு கொண்டாடி விரும்பத் தகுதி உண்டோ? பெண்களுக்கு முக்கியமான அடக்கம் அடியோடு போயிற்று. இருக்க வேண்டிய மரியாதையை மீறி நின்றாள்'. திருமங்கை மன்னனும்,