பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள்- 20% நிரம்பப் பெற்று விநயமே வடிவெடுத்திருக்கும் படியையும், செந்தாமரை. சாரகிராகிகளால் சேவிக்கப்படும் தன்மையை யும் உணர்த்துவனவாகும். (6) அன்னை மீர்! அழகிய பெருமை பொருந்திய மயிலையும் இளையமானையும் போன்றவளான இவள், நம்மை விஞ்சித் திருதொலைவில்வி மங்கலம் என்ற பெயரையல்லாமல் வேறு எந்த வார்த்தையையும் கேட்கின்றாள் இல்லை; முற்பிறவி களில் செய்த புண்ணியம் தானோ? முகில் வண்ணனாகிய எம்பெருமானுடைய மாயம்தானோ? அறியேன்; அவ்வெம் பெருமானுடைய சின்னங்களும் திருந்த இவள் வாயின ஆயின’ - பட்டர் அழகிய மணவாளப் பெருமாள்' என்றால் திருநாமம் நிறம்பெறுமாறு போலவும், சோமாசியாண்டான் ‘எம்பெருமானார்' என்றால், "திருநாமம் நிறம்பெறுமாறு போலவும், அனந்தாழ்வான் திருவேங்கடமுடையான்" என்றால், திருநாமம் நிறம்பெறுமாறு போலவும் எம்பெரு மான் இலட்சணங்களும் திருநாமங்களும் இப்பெண்பிள்ளை வாயில் நுழைந்து புறப்படுங்கால் அழகு பெறுகின்றன. (7) 'திருந்திய வேதங்களும் யாகங்களும் அழகிய செல்வமும் ஆகிய இவற்றால் நிறைந்திருக்கின்ற பார்ப்பனர்கள் நிறைந்து இருந்து வாழ்கின்ற தண்பொருநைக்கு வடகரையி லுள்ள வளப்பம் பொருந்திய திருதொலைவில்லி மங்கலம் என்னும் திவ்வியதேசத்தை, கரிய விசாலமான கண்களை யுடைய இவள் கை கூப்பி வணங்கிய அந்த நாள் தொடங்கி இந்தநாள் வரையிலும் இருந்து இருந்து தாமரைக்கண்ண: என்று என்றே உருக்குலைந்து மனமும் கரை!!!T நின்றாள். (8) بوده و س- rق