பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சடகோபன் செந்தமிழ்

இவள் நாள்தோறும் இரங்கி வாய்வெருவிக் கண்களிலே நீர்தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மணிவண்ணா! என்று கூவுகின்றாள்; பேசுதற்குக் கற்றுக் கொண்ட பிறகு, கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்கின்ற திரு தொலைவில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்.' . .

எம்பாரை மரங்களும் இரங்கக் கூடுமோ?" என்று கேட்க, இத்திருவாய்மொழி அருளிச் செய்த அன்று தொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது; இங்கனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புகளாலே பதம் செய்யப் பார்த்தாலும் சுக்கான் பருக்கைப் போலே நெகிழாதே இருக்கின்ற நெஞ்சு களும் இன்று அழிகின்றபடி கண்டால். சமகாலத்தில் மரங் கள் இரங்கச் சொல்ல வேண்டுமோ என்று அருளிச் செய்தார். மரங்கள் கின்று மதுதாரைகள் பாயும்: மலர்கள் வீழும்; வளர்கொம்புகள் தாளும் (பெரியாழ் 3.6:10) என்று அவதாரத்தில் திருக்குழல் ஒசையில் பட்ட எல்லாம் இத்துன்ப ஒலியிலே படுமாயின (9). - இப்பதிகத்தின் இறுதிப் பாசுரம் (பலச் சுருதிப் பாசுரத் திற்கு முன்னுள்ளது மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. பின்னை கொல்,கில மன்ம கன்கொல், - . ." திருமணமகள்கொல் பிறந்திட்டாள் என்ன மாயங்கொ லோஇ வள்ளுடு மாலென் றேகின்று கூவுமால்