பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii தந்து, அவை வேதப் பொருளின் வடிவமே என்று வியாக்கியா னங்கள் காட்டும் உண்மையை உணர வைக்கின்றார்கள். பேராசிரியர் அவர்கள் முதல் இதுவில், நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களும் எண்ணிக்கை அளவில் நான்கு வேதங்களுடன் சமதையாகக் காட்டப்படுகின்றனவேயன்றி அந்தந்த வேதக் கருத்துகள் எப்படி நம்மாழ்வாரின் அந்தந்தப் பிரபந்தங்களில் கிடைக்கின்றன என யாரும் தொகுத்துத் தரவில்லை என்று குறைப்படுகிறார்கள். ஆனால், ஆறாவது இயலிலிருந்து, பதினைந்து முடிய இவர் கள் பயன்படுத்தும் வியாக்கியான மேற்கோள்களிலேயே வேதம் குறிப்பிடும் மெய்ப்பொருள் இலக்கணங்களும் விளக்கங் களும் பயில்வதைப் பார்க்கின்றோம். அதனால்தான் அந்த மெய்ப்பொருள் உறவினைச் சங்ககாலத் தமிழின் அகத் துறைப் பொலிவோடு அகப்பொருள் தத்துவம்", "தாய்', தோழி', மகள் பாசுரங்கள்’ என்ற இயல் விளக்கங்களில் பேராசிரியர் அவர்களே சமயப் பொருள் அற்புதமான இலக்கியப் பொருளாகி மனித அநுபவமாகத் தரப்படு கின்றதை அறிகிறோம். தவிர, பேராசிரியரின் நூலில் "இயல்கள்" என்றே குறிப்பிடுவது குருகையர்கோன்: யாழினிசை வேதத்தியல்' என்பதன் எதிரொலிதானே! வடமொழி ஞானம் பெரிதும் நிரம்பிய சுவாமி தேசிகன் 'திருவாய்மொழி தெளியவோதி தெளியாத மறை நிலங்கள் தெளியக் கண்டோம் என்றே சான்று பகர்கின் றார். நூலிலிருந்து ஒருசில சான்றுகள்: "ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பெண் பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் எற்றுக்கு? என்ற வினா எழுகின்றது......ஆழ்வார் கள் பெண் தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்கின்றால்லர். இந்த நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வந்து சேருகின்இது. புருடோத்