பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சடகோபன் செந்தமிழ் கொண்டஎன் காதல் உரைக்கில் தோழி மண்திணி ஞால மும் ஏழ் கடலும் ள்ேவி சும்பும் கழியப் பெரிதால் (திருவாய் 7.3:8) என்று தானே பேசலாம்படி அளவற்ற தன் வியாமோகத்தை மறந்து அவன் மோகத்தையே கணக்கப் பேசுகின்றாள். இந்தப் பதிகம் முழுவதும் தலைவி எம்பெருமான்மீது ஈடுபட்டிருக்கும் (அநந்யார்ஹத்துவம்) திறத்தைக் காண முடிகின்றது. பிரணவத்தில் உகாரத்தின் பொருள் அநந்யார் ஹத்துவம் என்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது. 3. அறத்தொடுகிலை : குட்டநாட்டுத் திருப்பதி (கேரளம்) எம்பெருமான் மாயப்பிரான்மீதுள்ள திருவாய்மொழி தோழிப் பாசுரமாக நடைபெறுகின்றது (8.9.). இந்தத் திருவாய்மொழி தோழி அறத்தொடு நிற்றல் என்ற அகப் பொருள் துறையில் அமைந்துள்ளது. 'அறத்தொடு நிற்றல்” என்பது என்ன? அறம் என்பது பல பண்புகளையும் தழுவிய சொல், அகப்பொருள் இலக்கியத்தில் பெண்ணுக்குரிய முதற் பண்பு கற்பு. கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோருக்கு வெளிப்படுத்தல் என்பது இதன் பொருள். தோழி இதனைத் தலைமகளின் பெற்றோருக்குக் குறிப்பாக வெளிப்படுத்துவாள். தொல்காப்பியர் இதனை புரைதீர் கிளவி என்றும், இறையனார் களவியலுரையாசிரியர் மாறுகோள் இல்லா மொழி’ என்றும் குறிப்பிடுவர். - பாரங்குசநாயகி வயதுமுதிர்ந்து மங்கைப் பருவம் அடை கின்றாள். கணவனை நாடி அடையவேண்டிய வயதல்லவா இது திருப்புலியூர் எம்பெருமானுடன்இயற்கைப் புணர்ச்சியும் நடைபெற்றுவிடுகின்றது. தலைவியின் உயிர்தோழியானவள் தலைவியின் உருவ வேறுபாட்டாலும் சொற்களின்