பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சடகோபன் செந்தமிழ் கருமா னிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக் காடுகள்போல் திருமார்பு வாய்கண் கைஉக்தி கால்உடை யாடைகள் செய்தபிரான் திருமால் எம்ம்ரன் செழுநீர்வயல் குட்ட காட்டுத் திருப்புலியூர் - அருமாயன் பேரன்றிப் பேச்சிள்ை, அன்னைமீர்! இதற்கென் செய்கேனோ? (1) (மணித்தடம் தெளிந்த தடாகம்; உந்தி - கொப்பூழ்; கால் - திருவடி, உடை தரித்திருக்கும், செய்ய - ஆடை எனக் கூட்டுக; பேர் திருநாமம்) என்று தோழி முதலில் இவ்வாறு தொடங்குகின்றாள். இதில் திருப்புலியூர் எம்பெருமானுடைய திருமேனியின் அழகினைக் கண்டு அதில் ஈடுபட்டாள் இத்தலைவி என்று தோழி தாய்மார்க்கு உரைக்கின்றாள். அநுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையுடையதாய் பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய், தனக்கு மேல் ஒன்று இல்லாததான இனிமையுடையதாய் இருப்பது ஒரு மலை மேலே என்று கருத்துத் தோன்ற கருமாணிக்க மலைமேல்.’ என்கின்றாள். இத்தகைய ஒரு மலைமீது தெளிந்த ஒரு தடாகம் தாமரைக் காடுகள் பூத்தன போல் எம்பெருமானது எழில் நீலமேனியில் திருமார்பு, திருவதரம், திருக்கண்கள், திருக்கைகள், திருவுந்தி, திருவடிகள் முதலிய உறுப்புகள் அமைந்துள்ளன என்பது தோன்ற மணித்தடம்.ஆடைகள் செய்து பிரான் என்கின்றாள். பக்தர்கட்குப் பற்றுக்கோடாக வுள்ள பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கும் திருமார்பா தலால் அது சிவந்து காணப்பெறுகின்றது. அப்பிராட்டி வழியால் உறவு செய்தாருக்கு அநுகூலமண் சொற்களைப் பேசுகின்றது அவரது திருப்பவளம், இச்சொற்கள்