பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 சடகோபன் செந்தமிழ் அணிமேருவின் மீதுலவும் துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல் மன்னுள்ேமுடி யாரம்பல்கலன் தானுடை எம்பெருமான் (2) |அணி - அழகிய; துன்னு - செறிந்து: ஞாயிறுகதிரவன்; பல்சுடர் - கோள்கள், உடுக்கள்; முடி . கிரீடம்; ஆரம் - மாலை) என்ற பாசுரப் பகுதியால் அத்திருப்பதி எம்பெருமானது திவ்விய ஆபரண அழகில் தலைவி ஈடுபட்டுப் பேசும் படி களை விரித்துரைக்கின்றாள். மேரு மலையின்மீது ஆயிரம் கதிர்கள் விரிந்தாற் போன்ற திருவ பிடேகமும், விண்மீன் கூட்டங்கள் மின்னினாற் போன்ற பல மாலை வரிசைகளும், மற்றும் அணி வகைகளும் ஒளிரும் அழகை என்னவென்று சொல்வது?’ என்று வாய்வெருவி நிற்கின்றாள் என்று குறிப்பிடுகின்றாள் தோழி. இவளுக்கு அத்தலத்து எம்பெரு மானோடு கலவி நேர்ந்ததாகவே நினைக்கத் தோன்று கின்றது என்பது தோழியின் குறிப்பு. - ஆழ்வார் நாயகி இரவும் பகலும் திருப்புலியூர் வளத்தையே புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்பதை அடுத்துக் குறிப்பிடுகின்றாள் தோழி. புகழும் இவன்கின் றிராப்பகல் பொருர்ேக்கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியொடு செல்வ தொப்பச் செழுங்கதிர் ஆழிமுதல் புகழும் பொருபடை ஏந்திப் போர்புக் கசுரரைப் பொன்றுவித்தான்