பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 219 என்பது பாசுரம். தலைமகளிடத்துக் காணப்பெறும் மூன்று சிறப்புகளை எடுத்துக்காட்டித் தன் ஊகத்தை உறுதிப்படுத்து கின்றாள் தோழி அவள் அணிந்திருக்கும் திருவாபரணங்கள் முன்பு நாம் பூட்டினாற் போல இல்லை; கலைத்துப் பூண்டாற் போல் தோன்றுகின்றதன்றோ?' என்கின்றாள். உடுத்தின ஆடையும் நாம் உடுத்தின்படி இல்லை. தலைப்பு மாற்றி உடுத்தினபடியல்லவா உள்ளது? வேறுபாடு தோன்ற வில்லையா? என்று ஆடையின்மீது கவனத்தை ஈர்க் கின்றாள். இவள் வடிவிலும் பிறந்திருக்கும் புதுமைகள் தோன்றவில்லையா? இதற்கு முன்பு இது கோடையோடின வயல் போலேயன்றோ இருந்தது? இப்போது நீர் பாங்க் வயல் போலே தோன்றும் செவ்வியைப் பாருங்க என்கின்றாள். காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவல் யிலும் நின்று ஆராயப் புகுந்தாலும் இவளிடம் பிறந்துள்: அழகுகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை என்பதை யும் உணர்த்துகின்றாள். எம்பெருமானுடைய படிகளையே நினைக்க முடியாதபோது அவன் திறத்தில் ஈடுபட்டா ருடைய படிகளை (பாகவதருடைய படிகளை) நினைக்கும் தரமன்று’ என்பதனையும் பெறவைக்கின்றாள். இவற்றால் ‘முனைவன் மூவுலகாளியப்பன் திருவருள் மூழ்கின்ளே என்று இயற்கைப் புணர்ச்சி நடைபெற்று விட்டதை உறுதிப்படுத்து கின்றாள். மேற்கூறிய சான்றுகள் மட்டுமா? வேறு சான்றுகளும் உள்ளன என்கின்றாள். திருவருள் மூழ்கி வைகலும் செழுநீர் கிறக்கண்ணபிரான் திருவருள் களும்சேர்க் தமைக்கடை யாளம் திருந்தவுள (6) (வைகலும் நாள்தோறும்;