பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii தமனாகிய எம்பெருமானின் பேராண்மைக்கு முன் உலகம் அடங்கப் பெண் தன்மையதாக யிருக்கை யாலும் சீவான்மாவுக்குச் சுவாதந்திரிய நாற்றமே யின்றி பாரதந்திரியமே வடிவாயிருப்பதாலும், இவ்வகைகளுக்கேற்பப் பெண் பாவனை வந்தேறி பன்றே என்று கொள்ளலாம்......ஆழ்வார் பெண் தன்மை யெய்திப் பல திருக்கோயில் எம்பெருமான் களைப் பாடி அதுபவித்ததை அவர்களுடைய திருப் பாசுரங்களில் கண்டு மகிழலாம்’ (பக்.184). ............இங்ங்ணம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக் கும்பொழுது, அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்’ (பக். 185) இந்திக் கொள்கையினைத் தரும் ஆசாரிய ஹிருதய ஆதாரம்: சம்பந்த உபாய பலன்களில் உணர்த்தி துணிவு, பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாய், மகள் என்று பேர்" (சூரணிகை 133): சுவாமி தேசிகனும் இதையே 'பக்தி சிருங்கார வித்யா என்பர்’ எனப் பூருவர்கள் எடுத்துக் கொன் ரி. - இந்த ஆதாரத்தில் உள்ள சொற்களையும், பொருளை யும் விளக்கும் வகையிலும் 'தாய், தோழி, மகள் பாசுரங்கள்' பற்றிய இயல்களை நம் பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். அவற்றின் எளிமையே, அவரது பெரிய வெற்றி, ஏனென்றால், சமய நெறியின் தத்துவப் பொருளை விளக்கும்போது பலரும் கருத்தியமாகச் சொல்லிப்போவர் பேராசிரியர் அவர்கள் கருப்பொருளையே பருப்பொருளாகக், காட்டுவதுபோல வியாக்கியானங்களின் துணையோடு அருமையாக இந்த இயல்களை ஆக்கியுள்ளார்கள். இந்த