பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 221 முறையே' என்று குறிப்பிடுகின்றாள். 'மல்லில்அம்: செல்வக் கண்ணன்தாள் இம்மடவரலே" (7) என்ற தோழி யின் கூற்றும் சிந்திக்கத்தக்கது. அத்திருப்பதி எம்பெருமானின் திருநாமமேயன்றி வேறொரு பெயரையும் சொல்லுவதற் கில்லை. அங்ங்னமே, பரவாள் இவள் நின்று இராப்பகல்... திருப்புலியூர் புகழன்றி மற்றே (9). திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவது தவிர, வேறொன்றும் அறியாள் இத்தலைவி என்கின்றாள். இதனாலும் இத்தலத்து எம்பெருமானுடன் இவளுக்குக்கலவி நேர்ந்திருக்கவேண்டும் என்பதனை மேலும் உறுதிப்படுத்துகின்றாள். இதுதியாக, மேற்கூறிய காரணங்கட்கெல்லாம் முத் தாய்ப்பு வைத்த மாதிரி இதற்கு வேறுவிதமான முடிவும் கூற இயலாதவாறு, பிறிதொரு காரணம் காட்டுகின்றாள் தோழி. 'அன்றிமற் றோருபாய மென்? இவள் அம்தண்து ழாய்க்கமழ்தல் கின்ற மாயப்பி ரான்திரு வருளாமிவள் நேர்பட்டதே (10) (உபாயம் - காரணம்: கமழ்தல் - மனம் வீசுதல்) இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாயின் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ? என்கின்றாள். 'இராஜபுத்திரனை அணையாதார்க்குக் கோயில் சாந்து நாறுகைக்கு விரகு உண்டோ?’ என்பது ஈடு. இதனால் திருப் புலியூரில் நின்ற மாயப்பிரானுடைய திருவருளுக்கு இவள் இலக்காயினாள் என்று சொல்லித் தலைக்கட்டுகின்றாள்.