பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தாய்ப் பாசுரங்கள் திருவாய்மொழியில் தாய்ப் பாசுரமாக நடைபெறு பவை ஏழு பதிகங்கள். இவை ஈசுவர பாரதந்திரியத்தை யும், அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரி விப்பதாகச் சுட்டினோம் (ஆஹி குத்திரம் 134). பாசுரங் களைக் கொண்டு இவற்றை விளக்குவோம். 3 1. ஆடி ஆடி (2.4) என்ற திருவாய்மொழியின் அவ தாரிகையில் நம்பிள்ளை கூறுவது; அஞ்சிறைய மடநாராய்' (1.4) என்ற திருவாய்மொழி பேசும்போது இருந்த ஆர்த்தி எப்படிப்பட்டது? வாயுந் திரையுகளும் (2,1) என்ற திருவாய்மொழி பேசும்போது இருந்த ஆர்த்தி எப்படிப் பட்டது? இப்போது இத்திருவாய்மொழி பேசுகையிலும் ஆர்த்தி எப்படிப்பட்டது? என்பதை ஆராய்கின்றார். பெரு நிலங்கடந்த நல்லடிப் போதை’ (1.3:t) யது விக்க (அவ தாரம்) ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை 'அஞ்சிறைய மடநாரையில் 'நம்பியைத் தென்குறுங்குடி நின்ற (1.10:9) என்ற அர்ச்சாவதாரத்தில் ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை வாயுந் திரையுகளில்' இங்கு இத்திருவாய்மொழிக்கு முன் ஆழ்வார் ஆசைப் பட்டது அடியார் குழாங்களை (நித்திய சூரிகள்) உடன் கூடுவது என்று கொலோ (2.3:10) என்பது. இத் திருவாய் 1. திருவாய் : 2.44.2:4.4:5.6:6.6:6.7س2 * * *. عا. قبجي