பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv இயல்களில் பகவத் பக்தியாகின்ற பகவத் காமமே பரம புருஷார்த்தம் என்று ஆழ்வர்கள் பாசுரங்கள் மெய்ப்பிப்பதை எடுத்தக் கொள்கிறார்கள். இதைத்தானே,

சொல்லார் தமிழ் ஒருமூன்றும் சுருதிகள்

நான்கும் எல்லை இல்லா அறிநெறி யாவும் தெளிந்த (இரா. நூற். 44) என்று உடையவர் (இராமாநுசர் அறுதியிட்டார் என்று: திருவரங்கத் தமுதனார் பாடுவார்! சேமநல் வீடும், பொருளும்! தருமமும், சீரியநல் காமமும் என்று இவை நான்குஎன்பர் நான்கினும் கண்ணனுக்கே ஆம்.அது காமம்’ (ஷ-40) என்றும் நிலை நாட்டினார். தவிரவும், பக்வத் பக்தியாகிற "இன்பம் என்ற பரம புருஷார்த்தம் ஒன்றுதான் வழியாக வும், பயனாகவும் இருக்க இயலும். மற்றைய புருஷார்த் தங்களைத் தம்தம் படிநிலைகளில் பயன்களாகவே கொள்ள இயலும். பேராசிரியர் இப்பகுதி இயல்களில் மிகச் சிறப்பான விளக்கங்கள் தந்துள்ளார்கள். இயல் 11லிருந்து 15முடிய ஐந்து இயல்களில் ஆழ்வார் களும் ஆசாரியர்களும் பிரமாதாக்கள் என வழங்கப்பெறும் தகுதி விளக்கம் பெறுகின்றது. 'மணிவல்லிப் பேச்சான திருவிருத்தத்தில் நம்மாழ்வார் “விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே’ (54) என்று கூறும் சொற்களை நினைவூட்டி, 11-ஆம் இயலில் மகள் பாசுரங்களில் தூதுபற்றியவையாக வருபவற்றை விளக்கி, கிரமாதாக்களின் வடிவத்தினைப் பொருத்தமாகப் பேசு கிறார் பேராசிரியர், இறைநிலை (பரம், வியூகம். விபவம்: