பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் X- 233 விடாது சிந்திப்பவராதலால் அதுவே நினைவானt.டி. அவனோடே கூடித் தானும் படுக்கலாம் என்ற ஆசையோடே நாகத்தின் பின்னே நடந்தாள் போலும். மாயோன் அருவினையாட்டியேன் பெற்ற கோமளவல்வியை மால் செய்கின்ற கூத்து ஆமளவொன்றும் அறியேன்” என்றும் அந்வயிக்கலாம். ஆமளவு ஒன்றுமறியேன் என்றும் அந்வயித்தால் சுத்தே என்பது இப்படியும் ஒரு கூத்து ஆவதே! என்று முடியும், (4) கடல்ஞாலம் (5.5) தலைவி பிரிந்து வருந்துங் காலத்தில் அநுகரித்துத் தரித்தல்' என்று ஒருவகையுண்டு. இதை நம்பிள்ளை விளக்குகின்றார் அவதாரிகையிலே. அவர் கூறுவார் : கண்ணபிரான் பிரிந்து சென்ற காலத்தில் கோபியர் பிருந்தாவனத்தில் திரள் திரளாகக் கூடி ஒருவர்க் கொருவர் இங்ங்ணமே பேசிக் கொண்டார்கள்: நான் கண்ணன்; இதோ அழகான நடை நடக்கின்றேன் பார்’ என்றாள் ஒருத்தி; நான் கண்ணன்; செவிக்கினிதாகக் குழலுதுகின்றேன் கேள்' என்றாள். மற்றொருத்தி: நான் கண்ணன்; கொடிய காளிய நாகமே, நில் என்றாள் இன்ன்ொருத்தி. தோளைத் தட்டிக் கொண்டு கண்ணபிரான் செய்யும் லீலைகளையெல்லாம் செய்தாள் வேறொருத்தி: கோபாலர்களே! நீங்கள் மழைக்கு அஞ்சாதே நில்லுங்கள்; இதோ நான் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையைத் துக்கி விட்டேன். பாருங்கள் என்றாள் ஒருத்தி. தேநுகாசுரனை இதோ நான் மாய்த்து விட்டேன்ாகையால் இனி கன்று காலிகள் எல்லாம். அச்சமின்றி உலாவலாம்’ என்கின்றாள் ஒருத்தி (இதனை விஷ்ணு புராணம் 513:26,27 சுலோகங்களிலிருந்து எடுத்துக் காட்டுவர் ஈட்டாசிரியர். - r - - 5. அதுகரித்தல் அவன் சொல்லும் வார்த்தைகளைத் தானும சொல்லுதல். -