பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 235 கோவர்த்தனம்; இன்ஆன்கன்று கூட்டம் கூட்ட மான கன்றுகள்; இன ஆநிரை - திரளான பசுக் கூட்டங்கள்; இன.ஆயர் - இடையர் கூட்டம்; இனத் தேவர் - நித்திய சூரிகள்: தலைவன்-சர்வேசுவரன்) என்பது ஆறாம் பாசுரம், இதில் கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான கண்ணனுடைய செயல்களையெல்லாம் செய்தேன் நான் என்னா நின்றாள்' என்று தன் மகள் சொல்வதாகக் கூறுகின்றாள் திருத்தாயார் இனஏறுகள் செற்றேனும் யானே : நீளா தேவியின் அம்சமாகப் பிறந்த நப்பின்னைப் பிராட்டியை மணந்த வரலாறு இதில் அடங்கியுள்ளது. இனவேறுகள் - அசுர ஆவேசம் பெற்ற ஏழு காளைகள். - இனவான் கன்று மேய்த்தேனும் யானே : திருமங்கை யாழ்வார் கன்று மேய்த்து 'விளையாடவல்லானை" (பெரிதிரு. 2.5:3) என்றார்; இங்கே விளையாட வில்லான் என்ற சொற்போக்கு மிகவும் குறிக்கொள்ளத் தக்கது: 'யானை கொல்லவல்லான் சிங்கம் கொல்லவல்லான்’ என்றால் ஏற்கும்; இங்ங்னே விளையாடவல்லான்’ என்ன லாமோ? விளையாட்டுக்கும் ஒரு வல்லமை வேண்டுமோ? என்ற ஐயம் தோன்றும், அதற்குப் பரிகாரமாக ஆழ்வார் தாமே அடுத்தபடியாக அருளிச் செய்கின்றார். "வரைமீ கானில் தடம்பருகு கருமுகிலை என்று. இவ்விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் சிறப்புப் பொருள்: மலை மேல் காட்டிலேயுண்டான தடாகங்களில் கன்றுகள் தண்ணிர் குடிக்கப் புகுந்தால் இளங்கன்று களாகையாலே நீரிலே முன்னே இறங்கிக் குடிக்க இறாய்க்குமாம்; அக்கன்றுக்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீரமுதுசெய்து காட்டுவானாம். அதைச் சொல்லு