பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சடகோபன் செந்தமிழ் கின்றது. வரை மீகானில் தடம் பருகு' என்று இப்படிப் பட்ட வல்லமையை நினைந்து கன்று மேய்த்து விளையாட வல்லானை' என்றார் மங்கை மன்னன். அங்ானம் விளையாடினது தான் என்கின்றாள்' என் மகள். இனவாகிரை காத்தேனும் யானே. இளமையிலே கன்று களை மேய்த்துப் பருவம் நிரம்பின பிறகு பசுக்களை மேய்த்ததும் நானே' என்கின்றாள். இனவாயர் தலைவனும் யானே : ஆயர்களுக்குள்ளே கண்ணபிரான் தலைவனாயிருக்கையாவது: தன்னேராயிரம் பிள்ளைகள் (பெரியாழ். திரு.31.1:1) என்கின்றபடியே தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளும் தானுமாய்த் தீம்பு செய்து திரியுமிடத்தில் தீம்பில் தாமே தலைமை பெற்றிருப்பதாகும். இத்தகைய தீம்புகள் செய்ததும் தானே என்கின்றாள். இப்படி இவள் சொல்லுவது நித்திய சூரிகளின் நாதன் வந்து ஆவேசித்ததனாலே போலும்' என்கின்றாள் திருத்தாயார். . "ஆழங்காலிலே இழிந்தார் படியைக் கரையிலே நின்றா ராலே சொல்லப்போமோ?’ என்பது நம்பிள்ள ஈடு. (5) மாலுக்கு (6.5). என்ற இத்திருவாய்மொழியும் தாய்ப் பாசுரமாகவே நடைபெறுகின்றது. இதற்கு அவதாரிகை அருளிச் செய்த நம்பிள்ளை கூறுவது தோழிப் பாசுரமாகச் செல்லும் துவளில்மணிமாடம்(6.5) முன்னைய திருவாய்மொழியில் இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க, அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க, இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பிப்பதற்குரிய விரகு களை எண்ணுகையாலே தரித்திருக்கின்ற திருத்தாயார் இவளுடைய வளை முதலானவை காணக் கான உருக்குலை கின்ற படியைக் கண்டு அவற்றைத் தனித்தனியே சொல்லிக்