பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 239 இராவணன் முடிந்தான் (முமுட்கப்படி 135) காண்க. இன்ன காலத்திலே மேகம் பெய்யும் என்று அறுதியிடவல்லார் ஆருமில்லை. பெய்ய வேண்டியது பெய்யாதொழியவும் பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாத தாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமானும் அப்படியே; 'வந்தாய் போலவாராதாய், வாராதாய் போல் வருவானே (திருவாய் 6.10.9) திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகம் காட்டாதொழிந்தான்: விரும்புதலை எதிர் Lurrgrertogi) "தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான் (திருமாலை-35) என்றிப்படிப் பல படிகளாலே மேகத்திற்கும் எம்பெருமானுக்கும் நியாயங்கள் (சாம்யங் கள்) ஒத்திருக்கும். இவற்றைப் பேசி உருகுகின்றாள் என்கை, கோலச் செந்தாமரைக் கண்ணற்கு: "பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல், ஒருங்கே பிறள வைத்தார்’ (திருவிருத். 45) என்று தாமே பேசும் படி எம்பெருமான் தனது செந்தாமரைக் கண்ணோக்கத்தைத் தலைமேல் ஒருமைப்படுத்தி எங்கும் பக்க நோக்கியறியான் என்பைந்தாமரைக்கண்ணனே ( ) என்று நாச்சிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பார்க்க வறியாதிருந்த தன்மையை நினைத்து உருகு கின்றாள் என்கை. என்கொங்கு அலர் ஏலக்குழலி : கூந்தல் தலைக்கு அழகாயிருக்கும். கூந்தலில்லாத தலை வெறுக்கத்தக்கதாக இருக்கும். அதுபோல வணக்கத்தோடு கூடிய தலை கொண் டாடத்தக்கதாகவும் இருக்குமாதலால், கூந்தல் என்பதற்கு வணக்கத்தை உள்ளுறைப் பொருளாகக் கொள்ளலாம், வணக்கத்திற்குப் பரிமளமாவது-அந்த வணக்கம் பகவத் விஷயத்தளவிலே நிற்காமல் பாகவத விஷயம் அளவும் செல்லுதல் திருமால் திருப்பேர் வல்லார் அடிக்கண்ணிர் குடியமாறன் ( ) என்று தாமே பணித்தபடி பாகவத. பக்தி நிரம்பியவர். :