பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சடகோபன் செந்தமிழ் மேலும், என்கொங்கு அலர் ஏலக் குழலி’- தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களையுடைத்தாய், நறு மணம் கமழும் குழலையுடைய என்பெண் பிள்ளை. கொங்கு - தேன், அலர் - பூ, ஏலம் . தறு மணம், இவள் மயிர் முடிஒன்றுக்குத் தோற்றுக் குமிழ்நீர் உண்ணும் அவன்கண்டீர் இவளை அழித்தான் பங்களப்படை கொண்டு தனிவீரம் செய்வாரை அழிக்குமாபோலே. (பங்களப்படை கூளப்படையான கூட்டுப் படை) தனிவீரம் செய்வார் என்னது கொங்கலர் ஏலக் குழலியை' இழந்தது சங்கே : இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழ்ந்தாள். (6) உண்ணுஞ் சோறு (6, 7) என்ற திருவாய்மொழி யும் தாய்ப் பாசுரமாக நடை பெறுகின்றது. தலைவனது நகர் நோக்கிச் சென்ற தலைமகளைக் குறித்துத்தாய் இரங்கு வதாக அமைந்தது, மேல் திருவாய்மொழியிலே (6, 6) மோகித்துக் கிடக்கின்ற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத்தாயார் அது போயிற்று, இதுபோயிற்று' என்று அவன் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள்தானும் மோகித்தாள்; அவன் திருநாமத்தைச் சொல்லுகையாலே பெண் பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளுர் ஏறப் போனாள்: திருத்தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைத் தடவிப் பார்த்தாள்; வெறும் படுக்கையாய்க் கிடந்தது. இனி, இவள் என்வயிற்றிள் பிறப்பாலும், தன் தன்மையாலும் இங்கு இருந்த நாட்களில் தேகயாத்திரை இருத்தபடியாலும் இவள் திருக்கோளுர் புறப்பட்டுப் போனாள் என்று அறுதியிடுகின்றாள்' - இஃது இத்திருவாய் மொழியின் அவதாரிகையில் நம்பிள்ளை கூறியது. மேலும், 'வளை முதலாயினவற்றை எல்லாம் இழந்தாலும், நாம் இவளை இழக்கவேண்டியிராது என்றே இருந்தாள் மேல்