பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV அந்தர்யாமி, அர்ச்சை) துரது நடைபெறுவதை நம்மாழ் வாரின் பாசுரங்களில் நிகழும் நாடகமாகவே படம் பிடித்துக் காட்டுகின்றார். 12-வது இயலான "இறையதுபவம்” பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் நம்மாழ்வார் பிரபந்தங் கள் அனைத்தின் சாரத்தைப் பிழிந்து ஆழ்வாரின் பிரபத்தியையும் இன்ப, துன்பங்கள் மன, உடல் நிலைகளில் பரிமாற்றமாவதின் தன்மையையும், உயிரின்கண் உண்டாகும் இன்பம் எது என்றும் காட்டுகின்றார்கள். இந்த இடத்தில் திருவள்ளுவரின் இரு குறள்களைச் (621, 630) சுட்டி, அவர் என ஆழ்வார் குறிப்பிடும் நிலையின் இலக்கணத்தை, நயமாக எடுத்துரைக்கின்றார்கள். பேராசிரியர் அவர்கள் நூலில், 6-வது இயலிலிருந்து அவர்களது விளக்கங்கள் வளர்ந்து கொண்டே வந்து . 13, 14, 15-வது இயல்களில் கனமும் முழு வளர்ச்சியும் பெற்றுத் திகழ்கின்றன. அவைதாம் அர்த்த பஞ்சகம்’ "தத்துவத் திரயம்’, ‘மந்திரங்கள் ஆகிய மூன்று இயல்கள். இறைநிலை, உயிர்நிலை, தக்க நெறி, தடையான ஊழ்வினை, வாழ்வினையாகிய வீடுபேறு - இவற்றை ‘அர்த்த பஞ்சகம் என்று வைணவ நெறி பேசும். திருவாய் மொழிப் பாசுரங்களின் அடிகளைக் கொண்டே இவையனைத் தையும் சுட்டிக் காட்டுகின்றார் பேராசிரியர். இந்த இயலின் முடிவில், தம் விளக்கத்திற்கு அரண் செய்யும் வகையில் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்: “. ... வேதங்கள், இதிகாச புராணங்கள், மகாத் மாக்கள் , முனிவர்கள் இவர்களின் கருத்துகள் இவற்றில் (அர்த்த பஞ்சகம்) அடங்கியுள்ளன என்தும், இவையே திருவாய்மொழிக்கே வியாக்கி யார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரிய வங்கிபுரத்து நம்பியும் அருளிச் செய்வர்' (பக்.359. 60) என்று.