பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சடகோபன் செந்தமிழ் கூறப்படுகின்றது. ஆசாரிய ஹிருதயத்தில் ரிஷிகளிற் காட்டில் ஆழ்வார்க்கு நெடுவாசி அருளிச் செய்யுமிடத்து, "அவர்கட்குக் காயோடு என்னும் இவையே தாரகாதிகள்: இவர்க்கு எல்லாம் கண்ணன்றே . . . . (சூத்திர்ம்-50) (அவர்கட்கு - இருடிகட்கு: இவர்க்கு ஆழ்வாருக்கு; எனவரும் சூத்திரத்தில் இருவருக்கு முள்ள வேறுபாடு தெரி விக்கப் பெறுகின்றது. அவர்கட்குக் காய் கனி கிழங்கு இலை கள் காற்று தண்ணீர் என்னும் இவைகளே தாரக போஷக போக்கியங்கள்". இவர்க்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். கண்ணனே தாரக போஷக போக்கியாதிகள், சோறும் நீரும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' என்றால் போதுமே; உண்ணும் சோறு என்றும், பருகு நீர் என்றும், தின்னும் வெற்றில்ையென்றும் அடைமொழி கொடுத்துப் பேச வேண்டுமோ? சோறாகில் அஃது உண்னக் கடவதுதானே நீராகில் அது பருகக் கடவது தானே வெற்றிலையாகில் அது தின்னக்கடவது தானே, உண்ணும், பருகும், தின்னும் என்ற அடைமொழிகள் வீண் என்று நினைக்க வேண்டா வயிறு நிறைய உண்டவனுக்குப் பரமான்னம் கிடைத்தாலும் அஃது உண்ணும் சோறாகாது; கங்கைக் கரையிலே திரியுமவனுக்குக் கிணற்றுநீர் பருகு நீராகாது: அவ்வவற்றிற்கு விருப்பம் சில சமயங்களிலும் வேண்டாமை சில சமயங்களிலும் இருப்பது உல்க இயல்பு. 7. ஆசாரியர் - நம்மாழ்வார்; ஹிருதயம்-மனம், மாறன் மனம் என்றபடி. - 8. தாரகம் - தரிக்கச் செய்வது: நீர் முதலாயின. போஷகம் - புஷ்டியைத்(புலத்தைத்)தருவது; சோறு முதலாயின. பூேலக்கியம் இன்பத்தைத் தருவது: தின்னும் வெற்றிலை முதலாயின.