பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 - சடகோபன் செந்தமிழ் யாரைப் பார்த்து எங்கு நின்றும் புறப்பட்டபடி?’ என்று கேட்க, அவள் திருக்கோளுரில் நின்றும் என்று மறுமொழி கூற, அது கேட்ட எம்பெருமானார் 'அவ்வூரில் புக்க பெண் களும் வெளியே போகக்கடவரா யிருப்பார்களோ? என்றாராம். புகுமூர்' என்ற சந்தையின் சுவடறிந்து அருளிச் செய்தபடி, - ... < . (7) கங்குலும் பகலும் (7. 2) என்ற திருவாய் மொழியும் தாய்ப் பாசுரமாக நடப்பது, திருவரங்கப் பெருமானிடம் தன் மகள் மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட திருத்தாயார் அரங்கனைப் பார்த்து வினவுவதாக அமைந்தது இத் திருவாய்மொழி. - o முன்னர் உலகம் உண்டி (6.10) என்ற திருவாய்மொழியில் பெரிய பிராட்டியின் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் விழுந்து சரணம் புக்கவிடத்திலும் ஆழ்வார் தாம் எம்பெருமானுடைய திருவடிவாரத்தில் நிற்கக் கண்டிலர், இன்னமும் இந்தப் பிரகிருதி மண்டலத்திலேயே தம்மைக் கண்டார். உண்ணிலாவிய (7.1) என்ற திருவாய் மொழியில் தம்மைச் சப்தாதி விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகின்ற சம்சாரத்தில் வைத்தபோதே தம் பக்கலில் நின்றும் நம்மை அகற்றப் பார்த்தானேயன்றோ? என்று கூப்பிட்டார். இந்த ஆர்த்தியை எம்பெருமான் அறியாதவன் 9. உலகம் உண்ட பெருவாயாவில் பிரணவத்தின் பொருள் சொல்லப்பட்டது. உண்ணிலாவிய்"வில் ‘நம : என்ற சொல்லின் பொருள் பலவகையாலும் சொல்லப்ப்ட்டது. கங்கும் பகலும் என்பதில் 'நாராயணாய என்பதன் பொருள் சொல்லப்புடு இன்றது. இஃது ஏப்படி? ஆய என்ற நான்காம் வேற்றுமையின் பொருள் கைங்கரியமாதலாலும், ஆந்தக் கைங்கரியந்தான் அநுபவத்தால் உண்டாகும் பிரீதியின் காரியமாதலாலும், அந்த்.அதுவந்தான் பிராவண்யத்தின் கரியமாதலாலும் அந்தப் பிராவண்யம்ே இத் திருவாய்மொழியில் சொல்லப் :படுதலால் என்க்.