பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 245 அல்லன். எப்படியும் இவருக்கு நாம் பேறு பெறுவிப்பது திண்ணம்; இவர் இங்கே வந்து செய்யும் காரியத்தை அங்கே யிருந்துதான் செய்யட்டுமே” என்றிருந்தான். மக்களைப் பட்டினியிட்டு வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போலே "இவ்வாழ்வார்தாம் நாலுநாள் நோவு பட்டா ராகில், படுகின்றார்; இவருடைய திவ்வியப் பிரபந்தத்தைக் கொண்டு நாட்டை வாழ்விப்போம் என்றிருந்தான். இவர் ஒரு நொடிப் பொழுது இங்கிருந்தாலும் எம்பெருமானாலும் திருத்தவொண்ணாத சம்சாரம் எவ்வளவோ திருந்தி வாழும்படியாயன்றோ இருப்பது? அதற்காகவே இவரை இங்கு வைத்தான் அவன். இங்கு இருப்புப் பொருந்தா தாரைக் கொண்டே காரியம் பார்க்க வேண்டும் என்பதே எம்பெருமானுடைய பிடிவாதமாயிற்று. இங்கனம் எம்பெருமானைப் பிரிந்து துடிக்க வேண்டிய தாயிற்றே என்று நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மையை இழந்து தமது பரிதாபத்தைத் தம் வாயாலே சொல்ல முடியாதவராய்த் தாய் சொல்லவேண்டும்படியான தளர்ச்சியுண்டாக, திருத்தாயார் பாசுரமாகச் சொல்லு கின்றது. இத் திருவாய்மொழி. - - திருத்தாயார் பராங்குச நாயகியைப் பெரிய பெருமாள் (அரங்கநாதர்) திருவடிகளிலே இட்டு வை த்துக் கொண் டிருந்து 'இவள் அழுவது தொழுவது மோகிப்பது பிரலாபிப்பது அடைவுகெடப் பேசுவது நெடுமூச்செறிவது அதுவும் மாட்டாதொழிவது, தன்னை மறந்திருப்பது முதலியவற்றை ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லி இவள் திறத்திலே நீர் என்செய்வதாகத் திருவுள்ளம் பற்றியுள்ளீர்?" என்று கேட்கின்றபடியாய்ச் செல்லுகிறதாயிற்று. கம்பிள்ளை ஈடு: இத்திருத்தாயாரும் எல்லா பாரங் களையும் அவன் தலையிலே பொகட்டுப் புெண்பிள்ளையைத்