பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 247 நினைத்திருப்பது என்னோ? என்று கேட்கின்றாள் பராங்குச நாயகியின் திருத்தாயார். கங்குலும் பகலும் கண்துயிலறியாள் : கண்ணாரக் கண்டு, கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே (திருவிருத். 97) என்று அருளிச் செய்தவ்ர் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வேற்றுமை யின்றிக் கண்துயிலாத இவர்க்கு. சம்சாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பவர்கள். ஆழ்வார் இந்நிலத்தில் இருந்த போதிலும் இமையோர் நிலையிலிருப்பார், விசாரமுள்ளவர் கட்குக் கண் உறங்குமோ? என்று கொல் சேர்வதுவே: (5.10-1) என்றும், உன்னை என்று கொல் கூடுவதேச (5.10:9) என்றும் இடையறாத விசாரம் கொண்ட இவர்க்குக் கண்ணுறங்க விரகில்லையன்றோ? கண் துயில் கொள்ளாள் என்னாது கண்துயில் அறியாள்" என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருள்வது' சம்ஸ்லேஷத்தில் (சேர்ந்திருக்கும்போது) அவன் உறங்க வொட்டான்; விச்லேஷத்தில் (பிரிவில்) விரகவியசனம் உறங்க வொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டுபடியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.” கண்ண்மீன் கைகளால் இறைக்கும் : துராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி, ஆராதமனக்களிப் போடழுத கண்ணிர் மழைசோர (பெரு.திரு.1:9) என்றும்!ஏறடர்த்ததும் ஏனமாய்க் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப் பாடி வண்பொன்னிப் பேராறு போல்வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர் (.ே இ99) என்றும், சொல்லுகிறபடியே எம் பெருமானுடைய ஒவ்தொரு குணசேஷ்டிதங்களை நினைத்து தாரை தாரையாய்க் கண்ணிர் பெருகவிடுவது பக்தர்களுக்கு