பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சடகோபன் செந் தமிழ் வகிக்கிற திர்யக்குகளின் (பிராணிகள்) தன்மை இவளுக்கு அரிதாவ்தே. அவை நிறம்பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள், நாரத்தைப் பற்றினது களித்து வாழாநின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே செம்கயல் . அழகியகயல். அக்கயல் தண்ணிரைப்பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உம்மைவிட்டுத் தரிக்கவல்லது? உம் மு ைட ய ஊரிலிருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ உம்மை ஆசைப்பட்ட இவள்? இந்த ஏழு பதிகங்களும் பாரதந்திரியத்தையும் அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிப்பவை என்று விளக்கப் பட்டன. . -