பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள் பர்கரங்கள் 253 ஆழ்வார் நாயகியின் கண்ணுக்கு இலக்காகின்றது. அதன் உடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மை நிறத்தைக் கண்டு அதுவும் தம்மைப் போலவே பிரிவாற்றாமையினால் நிறம் வேறுபட்டிருக்கின்றதாகக் கருதி நாராய்! நீயும் நான் அகப்பட்டுத் தவிக்கும் துறையில் அகப்பட்டு இப்படி ஆனாயோ? என்பதாகச் செல்லுகின்றது. இப்பாசுரம்." வாயும்...நாராய் : 'பெரியமலைபோல் வந்து கிட்டு கின்ற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகும் அளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே! பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமலிருப்பது போன்று சலியாமலிருக் கின்ற நாரையே! என்கின்றாள். அதாவது, அலைகடல் நீர்குழம்ப அகடாட ஓடி அகழ்வா னுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை - -பெரி திரு. 11.4 : 1. மறவாதிருப்பார்க்குப் போலியாய் இரா நின்றது. அலை களை மீது கொண்டு வருமீனை மறவாதிருக்கின்ற இந் 6. இப்பாசுரம் தன்னுட்கையாறெய்திடு கிளவி என்ற அகத்துறையின்பர்ற் படும். அதாவது, தனக்கு நேர்ந்த துன்பத்தை, தன் ஆற்றாமையினால் பிறிதொன்றன்மேவிட்டுக் கூறுதல். இவ்வாறு கூறுதற்குப் பயன்-களவொழுக்கத்திலே நின்று சிற்ைப்புறத்தானாய தலைமகன் கேட்பின் விரைவில் வெளிப்படையாக வந்து இவளை மணந்து கொள்வான்; தோழி கேட்பின் தலைவ னுக்குச் சொல்லி விரைவில் மணந்து கொள்ளுச் செய்வாள்; யாரும் கேளாயின் தலைவி தானே சொல்லி ஆற்றினளாம். இதனைக் காமம் மிக்க கழிபடர்கிள்வி' என்று கூறுதலும் உண்டு. இத் திருவாய்மொழியின் முதல் ஒன்பது பாசுரங்களும் இத்துறையின் பாற்படும்.'