பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 255 என்பதனால் விளங்கும். என் தாய் உறங்கினாலும் நீ உறங்குவதில்லை என்றதனால் பராங்குச நாயகியாகிய இத்தலைமகளின் தாய்க்கு உறக்கமே இல்லை என்பது வெளிப்படை. மகளின் உறக்கமின்மை கண்டு வருந்தித் தாயும் உறங்குவதில்லை. தம்முடைய கண்களுக்குத் துஞ்சு தலில்லாமையை ஆழ்வார் இவ்வழியால் வெளியிட்டது ஒரு சமத்காரம். இங்கே நம் பிள்ளை ஈடு : 'இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கமின்றிக்கே யொழிவான் என்னெனில் : 'முன்பெல்லாம் இவள் இளமைப் பருவத்தில் இவளுக்குத் தக்கானாயிருப்பான் ஒருவனைப் பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே!’ என்று கண் உறங்காது; பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகின்றபடியைக் கண்டு அத்தாலே கண் உறங்காது.” இமையோடு இமைகொட்டாமல் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், அமருலகும் துஞ்சிலும்’ என்கின்றாள். நோயும் பயலைமையும் : மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த பசலை நிறமும். நோய் கண்ணுக்குத் தெரியாது; பசலை கண்ணுக்குத் தெரியும். தன் பக்கவில் காண் கையாலே அவ்விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக் கின்றாள். -- திருமாலால்...கோட்பட்டாயே : நோயும் பசலையும் இருந்தபடி கண்டேனுக்கு நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே! மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய் என்பாள் திருமாலால் என்கின்றாள். தோற்புரையன்றியோ மறுபாடுருவ வேர்ப்பற்றிலே’ நோவுபட்டாயாகாதே! என்பாள் நெஞ்சமும் கோட்பட்டாயே’ என்கின்றாள். T3 வேர்ப்பற்று-நெஞ்சு. எல்லாவற்றுக்கும் காரண மாகையாலே நெஞ்சை வேர்ப்பற்று' என்கிறார். தோற்புரை - உடல், மறுபாடுருவல்-பின்னே ஊடுருவிப்போதல்