பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ---. --------------- ------------. --- சடகோபன் செந்தமிழ் உறவு முறையாராவது கூட்டிவைப்பர்; தோழிமாராவது கூட்டிவைப்பர்; பழிக்கு அஞ்சி நாயகனே வந்து கைபிடிப்பன், இவையொன்றுமில்லையாகில் நாயகிதான் முடிந்து பிழைத் துப் போவாள். இவையே பயன்கள். ஆழ்வார் இப்படி எம் பெருமானைப் பழித்துக் கொண்டு சாகசத் தோற்றத்துடன் தெருவில் கிளம்பினாளா? எனில்: இல்லை. மடலூர்வுன் என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முற்ற முடிய கொண்டு செலுத்தவில்லை. 'தோழி உலகு தோறலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே (5.3:9), என்றும், "ஆம் மடம் இன்றி தெருவுதோறயல் தையலார், நாமடங்கப் பழி தூற்றி, நாடும் இரைக்கவே” (5.3:10) என்ற பாசுரங்களால் இதை அறியலாம். திருமங்கையாழ்வாரும் 'பெருந்தெருவே, ஊரார் இகழிலும் ஊராதொழியேன் நான், வாரார் பூம் பெண்ணைமடல். (சிறி.திரு) என்றும் உலகறிய ஊர்வன் நான், முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிழரந்த, மன்னியூம் பெண்னை மடல்' (பெரி. திரு)என்றும் மடலூர்வதாகச் சொல்லி அச்ச முறுத்துவதைக் கிாணலாம். இத் திருவாய்மொழியில் ஆழ்வார், நாயகி சமாதியில் நின்று தம்முடைய ஆசையின் மிகுதியைக் காட்டுவது இதன் உள்ளுறையாகும். “எம் பெருமான் தனக்குத் திருவுள்ளமான போது நம்மை நோக்கியருள்வன்; நாம் பதறவொண்ணாது’ என்று அது சந்தித்து ஆறியிருக்கவேண்டியதன்றோ சொரூபம்? அங்ங்னம் இராமல் தாம் பதறி இயல்புக்கு மாறாக நடந்து கொள்வது பெருங்குற்றமன்றோ? அதிலும் பிரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் இப்படி மடலூர்வதாகச் சொல்வது பொல்லாங் கன்றோ என்னில்: அன்று; அடைய வேண்டிய பொருளின் மீது கழிபெருங்காதலினால் ஏற்படும் முயற்சி ബമാത്ര மானுக்குத் தீங்குவிளைவிக்க வேண்டும் என்ற )بينية ه