பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii ...............தான் தோன்றி முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் மூளைப்பித்த தனிமாத் தெய்வம்' (திருவாய் 8-10:7) ஆகிய திருமால் 'என் நெஞ்சு நிறையப் புகுந்து 'தன் சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்' என்று ஆழ்வார் அழுத்தமாகக் கூறுகின்றார்! ஆழ்வாரின் 'நெஞ்சத்துஉள்ளிருந்து இருந்தமிழ்நூல் இவை மொழிந்தது” அவனே என்று ஆழ்வார் பேசுவதுபோல் பேராசிரியர் ரெட்டியார் அவர்களும் நம்மாழ்வாரைத் தம் நெஞ்சத்தில் நிறுத்தி ஆவி அகமே தித்திப்பாய்’ என்று அவர் திருமாலைக் குறித்துச் சொல்வது போலவே சொல்லி சடகோபுன் செந்தமிழ் என்ற இந்த நூலைத் தமிழுலகிற்கு மறக்க இயலாத படைப்பாக்கித் தந்துள்ளார்கள். ஆர்வாரின் அகம் சித்திக்கும் அதுவத்தை நம்முடைய அகத்தில் தித்திக்கும் அதுபவமாக மாற்றுகின்றது நூல். இது, இந்த நூலின் சிறப்பான வெற்றி. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்களது இந்த நூனுக்கு அணிந்துரை எழுதும் தகுதி அடியேன்பால் ஏதும் இல்லை. என் பேராசிரியரான அ. சீநிவாசராகவன் அவர் களிடம், தாம் கொண்டுள்ள அன்டாலும், மதிப்பாலும் எளியேனை இந்த நூலின் முதல் பயில்வோனாக இருந்து பயன் பெறப் பணித்தார்கள் . அந்த அநுபவத்தைய்ே அணிந்துரையில் சில சொல்ல முயன்றேன்; அவ்வளவே. ஆழ்வார் திருநகரியில் பிறந்து வளர்ந்த என்போன்ற ஒரு தமிழனுக்கு சடகோபன் செந்தமிழ் இனிப்பினை நுகர்வது உகப்புத்தானே! பேராசிரியர் அவர்களுக்கு அடியேன் செய்வ தெல்லாம் எனது வணக்கங்களே. இந்த நூலைத் தமிழ்கூது நல்லுலகம் நன்கு வரவேற்கும். எல்லாரும் பயிலலாம்; இவ்வின்பத்தை உறுதியாகத் துய்க்க லாம். அதுவே சடகோ.:னின் இனிமை என்று கூறி அமை கின்றேன். ... " ஆழ்வார்திருகரி அன்பன், - 24-9-氯9蓉罗。 தி. வைத்தமாகிதி

  • -- چم

笠g