பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மகள் பாசுரங்கள் 26i எண்ணத்தினால் உண்டாகின்ற முயற்சி அல்ல. நீறி நிற்கும் காதலையுடையார்க்கு இது குற்றமுமன்று. "ஞானம் கனிந்த நலம் என்றபடி ஞான பரிபாக ரூபமான பக்தியின் காரிய மாகச் சம்பவிக்கின்ற கழிபெருங்காதலால் வரும் சிறப்பு முயற்சிகள் யாவும் மிக்வும் ஆதரிக்கத் தக்கவையே. கருமமடி யான அஞ்ஞானத்தினால் வருபவையே விடத்தக்கவை: கீழ்த்தரமானவை. ஆனாலும் சேதநனிடத்து ஒரு வகையான முயற்சியும் சகிப்த சித்திேபாயத்தின் தத்துவத்திற்கு இந்த முயற்சிக்கு இடையூறாக மாட்டாதோ என்னில்; இந்த முயற்சியும் சித்தோபாயர்மான எம்பெருமான் பண்ணின கிருஷியின் பயன் எனக் கருதத்தக்கது. பேரமர்காதல் கடல்புரைய விளைவித்த காாமர் மேனி நம்கண்ணன்.” கு.3:4) என்று இப்படிப்பட்ட அதிப்ரவர்த்திக்குக் காரண மான பக்தியைப் பிறப்பிப்பவனும் வளரச் செய்பவனும் அவ்வெம்பெருமான் தான் என்றன்ேறாசொல்லப்பட்டுள்ளது" ஆகையால் இம்முயற்சி உபாயபலம் என்பது பூருவாசாரியர் களின் சித்தாந்தம். அன்றியும், பலனைக் கடுகப் பெற வேண்டுமென்ற விரைவின் மிகுதியால் கண்ணாஞ் சுழலை பிட்டு இத்தலைப் படுகின்ற அலமாப்பெல்லாம நம்மை யாசைப் பட்டு இங்ங்ணம் துடிக்கப் பெறுவதே! என்று அவன் திருமுகம் மலருகைக்கு உறுப்பாகையால் இத்தகைய முயற்சி கள் எல்லாம் அவனுடைய முகமலர்ச்சிக்காகப் பண்ணும் கைங்கரியத்தோடொத்து உபேயத்தில் கலந்து மறைந்து விடும் என்றே அறுதியிடத்தக்கது. மாசறு சோதிஎன் செய்யவாய் மணிக்குன் றத்தை ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே