பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சடகோபன் செந்தமிழ் பாக ற வெய்தி அறிவி ழத்துஎனை காளையம் ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செயுமே? (1) |மாக - அழுக்கு: செய்ய - சிவந்த ஆசு - குற்றம்; ஆதி மூர்த்தி - முழுமுதற்கடவுள்; பாசு - பசுமை நிறம்; அறிவு இழந்து - அறிவும் இழக்கப் பெற்று எனை நாளையம் - எத்தனை காலமுடையேம்; கவ்வை . பழிமொழி.) - என்பது முதற் பாசுரம். பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்த தோழி அதனை விலக்கப் புகுந்து * ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; "அவனுடைய அழகு முதலியவற்றில் அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை இலட்சியம் பண்ணும் நிலையில் இலேன்' என்கின்றாள் தலைவி. மடலெடுக்கை மாசு என்றிருக்கின்றாள் தோழி; மடல் எடாதொழிகை மாசு என்றிருக்கின்றாளிவள். பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கின்ற விஷயங்களைப் போன்றது ஆகுமே. வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்படவடிவிலே மண்டுகிறாள்' என்பது ஈடு. வெறும் வடிவழகை மட்டிலும் கண்டு துடிக்கின்றேன் அல்லேன்; அகவாயில் சீலகுணத்தைக் கண்டு துடிக்கின்றேன் காண்’ என்கின்றாள் - மாசறு சோதி என்பதனால். எம்பெருமான் நம்மை நாடிக் கொண்டு வரவேண்டுமே பன்றி நாமாக அவனை நாடுவது சொருபு ஞானத்திற்குப் போராதே என்று சிலர் சொல்ல, அறிவிழந்து எனை நாளையம்’ என்கின்றாள். அறிவு (சொரூப ஞானம்) அடியோடே தொலைந்து எத்தனையோ நாள் ஆயிற்றே என்பது இதன் கருத்து. - - இங்கே நம் பிள்ளை ஈடு : 'மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்றே போயிற்று நம்முடைய அறிவு, பறவை