பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

حي மகள் பாசுரங்கள் 263 முதலானவற்றின் (திர்யக்குகள்) காலிலே விழுந்து தூதுவிட்ட அன்று அது ஞானகாரியம் என்றிருந்தாயோ இன்று இருந்து கற்பிக்கைக்கு; அன்றே மதியெல்லாம் உள்கலங்கிற்று இல்லையோ? தன் பக்கல் கைவைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமன்றோ? பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார், அத்தோள்' என்னக் கடவதன்றோ? பேற்றினைப் பெறுகின்ற சமயத்திலே இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே, ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமே பண்ணவல்ல விஷயமன்றோ? தன்னையும் அதுசந்தித்து உலக யாத்திரையையும் அநுசந்திக்கும்படியோ அவன்படி” என்பதாம்: ஆனாலும் ஊரால் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண் டாவோ என்ன, ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செயுமே என்கின்றாள். ஏசுவதற்கென்றே பிறந்திருக்கின்ற ஊராருடைய பழிமொழிகள் நமக்குப் பழியோ? அதுவே நமக்குத் தாரகம் அன்றோ?என்கின்றாள். அவர்கள் பழிதாரக மாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது? 4. ஊரெல்லாம் துஞ்சி (5.4) இத்திருவாய்மொழியின் அவதாரிகையில் நம்பிள்ளை கூறுவது: கீழ்த்திருவாய் மொழியில் (5.3) மடலூரும் முயற்சி வலிதாய்ச் சென்றது. மடலூர வேண்டுமானால் நாயகனை ஒரு படத்தில் எழுதவேண்டுமல்லவா? அதை எழுதுவதற்கு அவகாச மில்லாதபடி கங்குல் இருள்வந்து புகுந்தது. 'ஆழிகொண்டு அன்று இரவி மறைப்ப" (பெரியாழ். திரு 4:4:8), என்கின்ற படி பண்டு பாரதப் போரில் சயத்திரதனின் வதத்திற்காக சூரியனை ஆழியால் மறையும்படிபண்ணினது போல் இப் போதும் அப்பெருமான்தானே பகலவனை அறையச் செய்தான் போலும், இவள் மடல் எடுத்தால் அது தனது பெருமைக்குக் கேடுவரும் என்று நினைத்து அதற்கு இடையூறு