பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2咒 சடகோபன் செந்தமிழ் தானே கொடிக்கு உடம்பு கொடுத்து நிற்கின்ற ஒளதார் யம் எனலுமாம். மெய்யே கொடுக்கும் ஒளதார்யம் அன்றோ இது? . . . . . 'மது மல்லிகை கமழும் : மதுவையுடைத்தான மல்லிகை யின் பரிமளம் இவள் இருந்த இடத்திலே வந்து அலை எறிதலின் மல்லிகை கமழும்' என்கின்றாள், மலட்டுக் கொடியாக இராமல் பூகத்தோடே அணைந்து பரப்பும் பூவாயிருத்தலின், மது மல்லிகை" என்கின்றாள். இதற்கு முன்பு சொன்னவையெல்லாம் (கமுகு, மல்லிகை) ஆஸ்ரய மாத்திரமேயாய்த் (ஆஸ்ரயம் - இடம்) தேனே மிக்கிருத் தலின் தேனார் சோலைகள்’ என்கின்றாள். ஆக, வானார் வண்கமுகுகள் தேன் வெள்ளத்திலே அலைந்து, பிரளய காலத்தில் மார்க்கண்டன் பட்டனவெல்லாம் படாநின்றன என்றபடி, இருவரும் கூட இருந்து மதுபானம் பண்ணிக் களிக்க வேண்டியிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், தேன்வெள்ளமிடுகின்ற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை' என்கின்றாள். - "இவர் இவ்வாற்றாமையோடு இருந்து கவிபாடுகிறது. உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும் இனிய பொருளாக இருக்கையால் அன்றோ? மனத்தினை உள்முக மாக்கி அநுபவிக்கமாட்டதார்க்கு, தன்னை அவர்கள் கண் களுக்கு இலக்காக்கிக் கொண்டு உபாய வஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும், யாவர்க்கும் தொழுகுலமான சர்வேசுவரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே நித்தியப் பிராப்பியனாகக் (அடையத்தக்கவனாகக்) கொண்டு அங்கே இருக்கின்றவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகம் கொடுத்துக் கொண்டு நிற்பதுபோலே அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களாயும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை