பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 271 விடமாட்டாதே நிற்கிறபடி நித்தியரும் முக்தரும் சம்சாரி சளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றி யன்றோ கிடப்பது?'- என்ற சட்டுப் பகுதி சுவைத்துச் சிந்திக்கத்தக்கது. - "இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டிய தேசத்திலே தனியே நிற்கின்றான் காண்’ என்பாள் தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனார்ை’ என்கின்றாள். "அவதாரங்கள்போல் தீர்த்தம் பிரசாதித் தொழியாது தங்கியிருத்தலின் உறையும் கோனாரை என்கின்றாள். அவனைச் சொல்லும்போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது: தம்மைச் சொல்லும் போதும் அ ைனை இட்டல்லது சொல்லப் போகாது. கோனாரை என்ற இடம் நாராயண சப்தார்த்தம்; அடியேன்” என்ற இடம் பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈசுவரப் பிரதானம். ‘அடியேன் கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள் (சதுர்த்தி). என்று கொலோ? என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகின்றதன்றோ?'-என்பது ஈடு. 'கோனாரை அடியேன்"-நாயகன் தைரியத்தையுடைய நாயகன்; இவள் தைரியம் இல்லாதவள். ‘அடியேன் கூடுவது என்று கொலோ? : சொரூபத்திற்குத் தகுதியாக வேற்றுமை யின் பொருளோடே தலைக்கட்டுகிறபடி. எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ? தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகுமாம், அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை (நிலைகளை)யுடையவராகவுமாம்; எல்லாக் காலங்களிலும் சொரூபம் மாறாது பிண்டத்துவ, கடத்துவ, கபாலத்துவ, சூர்ணத்துவங்களாகின்ற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும், மண்ணான வடிவுக்கு