பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 273 கீழ்த் திருவாய்மொழியில் (6.1) ஆழ்வார் எம்பெரு மானுடைய பிரிவுக்கு ஆற்றமாட்டாது தூதுவிட்டார். அந்த வருத்தத்தை அறிந்த எம்பெருமான் ஆனைக்கு உதவ வந்தாப்போலே அரை குலையத் தலை குலைய ஓடிவந்து ஆழ்வாருக்குக் காட்சி தரப் பார்த்தான்; இந்நிலையில் ஆழ்வார் பிரணயரோஷம் (ஊடல்) தலையெடுக்கப் பெற்று. சுவாமி, இங்கே உமக்குப் பணி இல்லை; பணி போருமிடத்தே எழுந்தருளிர்” என்று கதவடைத்துத் தள்ளு கின்றார் இத்திருவாய் மொழியில், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ங்னே பிரண யரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய பாவனை உறவே இப்போது ஆழ்வாருக்கு ஆகி அல்லது காரமே முற்றியிருக்கின்றது. பெருமாள் திருமொழியில் ஏர் மலர்ப்பூங்குழல் (5) என்கின்ற திருமொழியும் பெரிய திரு மொழியில் 'காதில் கடிப்பிட்டு (10.8) என்கின்ற திருமொழி யும் இந்த நடையில் அவதரித்தவையாகும். மின்னிடை மடவார்கள் கின்னருள் சூடுவார் முன்புகா னதஞ்சுவன் மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே! உன்னுடைய கண்டாயம் கானறி வன்:இனி யதுகொண்டு செய்வதென் என்னுடைய பந்தும் கழலும் தந்துபோகு கம்பீ (1) (மின்இடை - மின்னற்கொடி போன்ற இடையை யுடைய: அருள் - கிருபை, சூடுவார் - அநுபவிப் பார்; முன்பு - முன்னிலையில்; மன் - அரசன்: அரண் - கோட்டை காய்ந்த சீறியழித்த: கண் டாயம் . தீம்பு. கழல் - அம்மனைக் காய் போகு ஏகு) என்பது முதல் பாசுரம், 18 سيما يلي ،