பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சடகோபன் செந்தமிழ் கேட்பதில் நான் இல்லை; என்னுடன் கலப்பதற்காக அவன் வந்து எழுந்தருளியிருக்கும் தென் திருப்பேரெயில் சென்று சேர்வேன், காண்மின்’ என்கின்றாள், முன்பாசுரத்தில் (8) சேர்வன் சென்று என்று கூறின தையே திரும்பக் கூறுகையாலே தோழிமாரும் தாய்மாரும் அதனை மறுத்துக் கூறினமை புலப்படும். தோழிமீர்காள்! அன்னை மீர்காள்!" என்றது, அவமதித்துச் சொல்லுகிறபடி. "நீங்கள் எனக்குத் தோழிமாராகவும் தாய்மாராகவும் வாய்த்தது அழகாயிருந்தது! இதுவோ நீங்கள் எனக்குப் பிரியமும் இதமும் பார்ப்பது என்று மறுக்கின்றபடி. அறி வில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்? விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத் தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்? இவள், தன்னை மறந்து அவனையே பார்த்துப் பேசுகின்றாள்; அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகின்றார்கள். இதற்கு நீங்கள் உரைக்கின்றது என்: கலங்கினாரோ தெளிந் தாரைத் தேற்றுவார்? நீங்கள் நிற்கின்ற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கின்ற என்னை புறப் படுகை பழி' என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்? அம்மா, நெஞ்சு இங்கில்லை என்றாயே, நெஞ்சு இல்லையாகில் இந்த வார்த்தை தானும் நீ சொல்ல முடியா தென்றோ? எங்களைக் கண்டித்து நீ இங்ங்ணம் பல வார்த்தைகள் சொல்லுவதற்கு நெஞ்சு உடனிருந்துதானே ஆக வேண்டும்’ என்று அவர்கள் சொல்ல, கிறைவு எனக்கு இல்லை என்கின்றாள். 'நெஞ்சும் நிறையும் அவன் பக்கலின். நிறைவு-அடக்கம்; நெஞ்சு-அது இட்டு வைக்கும் கலம். உங்களோடு பேசுவதற்குரிய நெஞ்சு வேறு: உங்கள் பேச்சைக் கேட்பதற்குரிய நெஞ்சு வேறு. பேசுகைக்குரிய