பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சடகோபன் செந்தமிழ் உருவெளிப்பாடாய்ச் சென்றது. அதைவிட இத்திருவாய் மொழிக்கு வாசி என் எனில்; அங்குப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக இருக்கும்; இங்குப் பிரீதியின்மை தலை யெடுத்திருக்கும். தொடங்கும்போதே இணைக்கூற்றங் கொலோ? என்கையாலே இங்குத் தீங்கு செய்வதில் (சாய கத்வத்தின் உறைப்பு) உறைப்பு தெரியவரும் . ஏழையர் ஆவிஉண்ணும் - இணைக்கூற்றங் கொலோ அறியேன்! ஆழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்! சூழவும் தாமரைகாள்மலர் போல்வந்து தோன்றும்கண்டிர் தோழியர்களள்: அன்னைமீர் என்செய்கேன் துயராட்டியேனே(1) (ஏழையர்-பெண்பிறந்தார்; ஆவி-உயிர்; இணைஇரண்டு; ஆழிஅம் கண்ணன்-கடல் வண்ணனான கண்ணபிரான்: சூழவும்-நாற்புறமும்; நாள்மலர்அன்றலர்ந்த மலர்; துயராட்டி-துயருறுகின்ற நான்) - என்பது முதல் பாசுரம். இதில் எம்பெருமானுடைய திருக் கண்ணின் அழகு வந்து தன்னை நலிகின்ற படியைப் பேசு கின்றாள் பராங்குசநாயகி. கரியவாகிப் புடைபரந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே” (அமலனாதி-8) என்று திருப்பாணாழ்வாரைத் துடிக்கப் பண்ணின திருக்கண்கள் தம்மையும் துடிக்கப் பண்ணுகிறபடியைச் சொல்லுகின் றாள். திருவிருத்தத்தில் பெருங்கேழலார் தம்பெருங்கண் கண்மலர்ப் புண்டரீகம் நம்மேல், ஒருங்கே பிறழவைத்தார். (45) என்றருளிச் செய்தபடி இவரை முதன் முதலாக