பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் சாக்ரங்கள் 爱燃湾 நினைவா லேமனத்தினை வேறு ஒன்றில் செலுத்தித் தரிப் போம் என்ற நோக்கத்தாலே. அன்றியும், அவனுக்குப் போலியான பொருளைக் கண்டாயினும் தரிப்போம் என்று கண்வைத்தார் என்றும் கருதலாம். பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும், பாவியேன் மெல்ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்லவ எல்லாம் பிரான் உருவே என்று. (பெரி.திருவக். 73) என்பது இவர் அநுபவம் அல்லவா? ஆனால், அவை தரிப் புக்குக் காரணம் ஆகாமல் அவனுடைய நினைப்பினை ஊட்டுவனவாகத் துன்பினைத் தரப்புக்கனவற்றில் யாதானும் ஒருபொருள் தோற்றினும் அப்பொருளின் உளதாம் தன்மை அவனையொழிய இல்லாமையாலே, அவனைக் காட்டிக் கொண்டே யன்றோ தோற்றுவது? ஆக, உலகத்துப் பொருள் கள் அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய, அவற்றால் நோவு படுகின்றபடியை அந்யாபதேசத்தாலே பேசுகின்றார். இத்திருவாய்மொழி நாயகி சமாதியில் பெண் பேச்சாக நடை பெறுகின்றது. சோலைக்குச் சென்ற ஆழ்வார் நாயகியை அங்குள்ள குயில், மயில் முதலானவை அவனுடைய பேச்சையும் வடிவ்வையும் நினைப்பூட்டி நலிய, "இவை தாமாக நலிகின்றன அல்ல: நம்மை முடிக்க வேண்டு மென்று பார்த்த எம்பெருமானாலே ஏவப்பட்டு நவிக் கின்றன’ என்றெண்ணி, அப்பறவைகளை நோக்கி, உங்களுக்கு என்னை நவிய நினைவாகில் இவ்வளவு பாரிப்பு வேண்டுமோ? என் உயிரை நானே கொடுக்கச் சித்தமாக இருக்கின்றேனே. என்று சொல்லியும் அவனுடைய திருசு குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் நடைபெறு கின்றது இத்திருவாய்மொழி.