பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286. சடகோபன் செந்தமிழ் இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கெத்தனை என்னுயிர் கோவ மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் என்னுயிர்க் கண்ணபிரானை கிர்வரக் கூவுகிலிர் என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (1) (சேவல் ஆண்குயில்; நோ.வ - நோவும் படி, கூவுகிலீர் . அழைக்க மாட்டீர்கள்: இத்தனை - இவ்வளவு பாரிப்பு) என்பது முதற் பாசுரம், அடுத்த பாசுரங்களில், அன்றிற் பேடைகள் (2,3), கோழிகள் (4), பூவைகள்(5) கிளிப்பைதல் கள் (6) மேகக் குழாங்கள்() வண்டு தும்பிகள் (8) நாரைத் திரள்கள் (10)-இவற்றை நோக்கிப் பேசுகின்றாள். பாசுரங்கள் யாவும் உரைநோக்கிப்படித்து இன்புறத்தக்கவை. 12. அறுக்கும் வினையாயின் (9.8) : கீழ்த் திருவாய் மொழியில் (9.7) திருமூழிக்களத்து எம்பெருமான் பக்கல் து.ாதுவிட்டார்." துரது சென்றவர்கள் மீண்டுவந்து செய்தி சொல்லுமளவும் ஆற்றியிருக்க வேண்டுமே. ஆழ்வார் நாயகிக்கு அது முடியவில்லை. 'திருநாவாயிலே சென்று கிட்டுவோம்’ என்று பார்த்தார். காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் (பெரி. திருவந்:34) என்ற நிலையிலிருக்கும் இவர் எங்ங்னம் திருநாவாய்க்குச் செல்வர்? அந்த மனோரதமே இத்திருவாய்மொழியாகப் பரிணமிக்கின்றது. " திருவடிசென்று பிராட்டியைத் திருவடி தொழுது மீண்ட பின்னர் பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்குப் பிறந்த மனோரதம் போலே கீழ் விட்ட தூதர் அத்தலைப் 14. மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை என்ற தலைப்பி லுள்ள கட்டுரை காண்க. (இயல்-11); -