பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 28? பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்னே நடுவுஇவர்க் குப் பிறந்த மநோரதத்தைச் சொல்லுகின்றது”என்பது ஈடு. பெரிய முதவியார் (ஆளவந்தார்) பேற்றினைப் பெறுவதில் உள்ள விரைவாலே எப்போதும் இத்திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பர். ஆகை யாலே இத்திருவாய் மொழியினைப் பெரிய முதலியார் திருவாய்மொழி' என்று வழங்கப்படுகின்றது. கண்டே களிக்கின்றதிங் கென்று கொல் கண்கள் தொண்டே யுனக்காய் ஒழிந்தேன் துனிசின்றி வண்டார் மலர்சோலைகள் சூழ்திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எங்கோவலர் கோவே (6) இங்கு-இத்திருப்பதியில்; என்று கொல்-என்றைக்கோ, துரிசு-உலகவிஷயங்களில் மனம் செல்லுதல்; கொண்டு-உகந்த விடமாகக் கொண்டு; உறை கின்ற-எழுந்தருளியுள்ள) என்பது இத்திருவாய்மொழியின் ஆறாம் பாசுரம், "எனக் காகத் திருநாவாயைக் கோயிலாகக்கொண்டு, உறைகின்ற கோவலர் கோவே, உன்பக்கலில் பிறரல்லாதாருக்குப்பயனான (அநந்ய பிரயோஜனம்) அன்பே உடையேனான என்னுடைய கண்களின் விடாய் சொல்லுந்தரமன்று: என் பசி தீரா விட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதும்’ என் கின்றார். உலகில் யாசிப்பவர்கள் என்பசி கிடக்கட்டும்; என்குழந்தை படுகிற பாடு பாருங்கள். அதன் பசியை முன்னர்த் தீர்த்தாலே போதும் என்பர்களே; அது போலச் சொல்லுவது இது. .